ஒரு வரிச் செய்திகள்

 


        சென்னை மாநகராட்சி 88வது வார்டு ஏரியா சபை கூட்டம் மாமன்ற உறுப்பினர் நாகவல்லி பிரபாகரன், முன்னாள் நகரச் செயலாளர் இளங்கோ தலைமையில் நடைபெற்றது. இதில் மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டு பொது மக்களின் குறைகள் கருத்துக்களை கேட்டுறிந்தனர்.


🔴ஆவின் பச்சை நிற பால் - மீண்டும் விலை உயர்வு


 5 லிட்டர் பச்சை நிற பால் பாக்கெட்டின் விலை இன்று முதல் ரூ.10 உயர்கிறது

ரூ.210க்கு விற்கப்பட்டு வந்த 5 லிட்டர் பச்சை நிற பால் பாக்கெட் ரூ.220க்கு விற்கப்படும் என அறிவிப்பு


🔴இன்று தமிழகம் வருகிறார், காங்கிரஸ் எம்.பி., ராகுல்காந்தி

உதகையில் சாக்லேட் தயாரிக்கும் தொழிலாளர்களையும், கூடலூரில் பழங்குடியின மக்களையும் சந்தித்து பேசுகிறார்


🔴கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு

வருகிற 19, 20ம் தேதிகளில் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவிப்பு


🔴ஆசிய ஹாக்கி - இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்தியா


🔴நெல்லை மாவட்டம் நாங்குநேரியில், வீடு புகுந்து பள்ளி மாணவன் சக மாணவர்களால்

வெட்டப்பட்ட சம்பவம்

பாதிக்கப்பட்ட மாணவனின் கல்லூரி படிப்பிற்கான முழு செலவையும், தான் ஏற்றுக்கொள்வதாக அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு


🔴மாறுகிறது சட்டங்களின் பெயர்கள்


இந்திய தண்டனை சட்டம் (IPC), இந்திய சாட்சிகள் சட்டம் (IEA), குற்றவியல் நடைமுறை சட்டம் (CPC) ஆகியவற்றின் பெயரை பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய சக்‌ஷ்யா, பாரதிய நகரிக் சுரக்‌ஷ சன்ஹிதா என மாற்றுவதற்கான மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்தார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா


🔴செங்கல்பட்டு அருகே சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவிப்பு

*விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ₨2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ₨50 ஆயிரமும் வழங்க உத்தரவு


🔴காரைக்கால் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியை மாற்றம் செய்து புதுச்சேரி கல்வித்துறை உத்தரவு

2 ஆண்டுகளாக அரசு பள்ளிகளில் 10ம் வகுப்பு

தேர்ச்சி விகிதம் குறைந்ததால் நடவடிக்கை

முதன்மை கல்வி அதிகாரியாக இருந்த ராஜசேகர் மாற்றப்பட்டு விஜயமோகனா என்பவர் புதிய அதிகாரியாக நியமனம்



    தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் சார்பில் நவீன வசதிகளுடன் சீரமைக்கப்பட்ட 100 மஞ்சள் நிற பேருந்துகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக கொடியசைத்து தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்


🔴பேருந்துகள் மட்டும் மறுசீரமைக்கப்படவில்லை, 10 ஆண்டுகாலம் சீரழிந்த போக்குவரத்துத் துறையும் மறுசீரமைக்கப்பட்டுள்ளது;

போக்குவரத்துத்துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது;

புதிய பேருந்துகள் சாலையில் ஓடும் போது புதிய மலர்ச்சியை ஏற்படுத்தும்"

- அமைச்சர் சிவசங்கர்



    சென்னை அரும்பாக்கத்தில் மாடு முட்டியதால் காயமடைந்த சிறுமி சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில், சிறுமியிடம் நலம் விசாரித்தார் சென்னை பெருநகர மேயர் ப்ரியா.



    கோவை சரக காவல்துறையின் புதிய டி.ஐ.ஜி.யாக சரவண சுந்தர்  பொறுப்பேற்றுக் கொண்டார்.


🌏...உண்மை செய்திகள்...🌏