வூசு போட்டியில் பதக்கங்களை அள்ளிய சென்னை மாணவர்கள்

 


    மாநில அளவிலான சப் ஜூனியர் மற்றும் ஜூனியர் கான வூசு போட்டி  ஸ்ரீ தரம்சந்த் ஜெயின் பள்ளியில் (CBSC) கடந்த 7, 8 மற்றும் 9 ம் தேதிநடைபெற்றது.

இதில் சென்னை உட்பட பல மாவட்டங்கள் கலந்து கொண்டனர்.சென்னை மாவட்ட வூசு செயலாளர் திரு.விசாகபதி,சென்னை மாவட்ட வூசு தொழில்நுட்ப இயக்குனர் திரு .தண்டபாணி,மற்றும் பயிற்சியாளர்கள் சுவாதி,கிஷோர் குமார் ஆகியோர் மாநில அளவிலான போட்டிக்கு மாணவ மாணவியர்களை அழைத்துச் சென்றனர். சென்னை மாவட்டத்தை சேர்ந்த மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டு 5 தங்கப்  பதக்கங்களும், 2 வெள்ளி பதக்கங்களும், 9 வெண்கல பதக்கங்களும் பெற்றுள்ளனர். 

வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களை சென்னை மாவட்ட வூசு கௌரவ தலைவர்கள் திரு.சுரேஷ்குமார் மற்றும் திரு.மனேகர பூபதி சென்னை மாவட்ட வூசு தலைவர் திரு Po.புல்கானி, சென்னை மாவட்ட  வூசு  துணைத் தலைவர் திரு. ஆலயகுமார்,சென்னை மாவட்ட வூசு பொருளாளர் திரு. ஜெயச்சந்திரன், புதுகை வரலாறு சென்னை பதிப்பின் தலைமை ஆசிரியர் திரு.காதர், நேத்தாஜி சமூக சேவை இயக்கத்தின் தலைவர் டாக்டர் சரத் மற்றும் செயலாளர் திரு.S.வன்னியராஜன்,சாரதா மெட்ரிகுலேஷன் பள்ளியின் தாளாளர் திரு.சரவணன் மாநில அளவிலான போட்டியில்வெற்றி பெற்ற  மாணவ மாணவியர்களுக்கும் மேலும் தேசிய அளவிலான போட்டியில்  பங்கு கொள்ளும் மாணவ மாணவியர்களுக்கும்பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்தனர்💐💐


மு.இராமசந்திரன்

🌏..உண்மை செய்திகள்...🌏