உயர்மட்ட குழு விசாரணைக்கு உத்தரவு

 


    ஒடிசா ரயில் விபத்து விசாரணை செய்ய உயர்மட்ட குழு விசாரணைக்கு உத்தரவு,

ஒடிசா ரயில் விபத்தில் 288 பேர்  உயிரிழந்த சம்பவத்திற்கு வெளிநாட்டு தலைவர்கள் இரங்கல்

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, தைவான் அதிபர் சாய் இங் வென் ஆகியோர் இரங்கல்

இந்தியாவின் ஒடிசாவில் ஏற்பட்டுள்ள ரயில் விபத்து வேதனையளிக்கிறது

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்; காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்"  - ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்

  ஒடிசா ரயில் விபத்தில் சிக்கி உயிரிழ்ந்தோரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்

விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்

ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் இரங்கல்



     12841 எனும் எண் கொண்ட கோராமண்டல் எக்ஸ்பிரஸ் மேற்குவங்கத்தின் ஹவுரா ரயில் நிலையத்திலிருந்து சென்னைக்கு வாரத்திற்கு 6 நாட்கள் இயக்கப்படுகிறது.


இந்நிலையில், வழக்கம் போல இந்த ரயில் பிற்பகல் 3.20 மணியளவில் ஹவுரா ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டிருக்கிறது. ஆனால், சான்ட்ராக்சி, காரக்பூர், பல்சோர் ஆகிய ரயில் நிலையங்களை கடந்துள்ளது. ஆனால், அது பத்ராக் ரயில் நிலையத்திற்கு வந்து சேரவில்லை.


ரயில் விபத்து: பத்ராக் ரயில் நிலையத்தில் காத்திருந்த பயணிகள் மற்றும் ரயில்வே அதிகாரிகளுக்கு சந்தேகம் வலுவடைந்திருக்கிறது. ஆனால் ரயிலுக்கு என்ன ஆனது என்கிற விவரம் யாருக்கும் தெரியவில்லை. இதன் பிறகுதான், பல்சோர் மாவட்டம் பாஹாநாகா ரயில் நிலையம் அருகே இந்த ரயில் தடம்புரண்டுள்ளது. இந்த ரயிலின் B2 முதல் B9 வரை உள்ள பெட்டிகள் மற்றும், A1, A2 பெட்டிகள் என 10 பெட்டிகள் மொத்தமாக தடம்புரண்டு எதிர் தண்டவாளத்தில் விழுந்திருக்கிறது




இதனையடுத்து பெங்களூர் யஷ்வந்த்பூரிலிருந்து ஹவுரா நோக்கி வந்துக்கொண்டிருந்த மற்றொரு ரயில் இந்த தடம் புரண்டு கிடந்த ரயில் பெட்டிகள் மீது வேகமாக மோதியுள்ளது. இதுதான் விபத்தை, கோர விபத்தாக மாற்றியதற்கான காரணமாகும். இந்த யஷ்வந்த்பூர் ரயிலின் பெட்டிகள் விபத்தில் சிக்கி மூன்றாவது தண்டவாளத்தில் விழுந்துள்ளது. ஏற்கெனவே கோர விபத்தில் பலர் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த நிலையில், மூன்றாவது டிராகில் வந்த சரக்கு ரயில் இந்த யஷ்வந்த்பூர் ரயில் பெட்டியின் மீது கண்மூடித்தனமாக மோதியுள்ளது.


3 ரயில்கள்: இப்படி 3 ரயில்களும் அடுத்தடுத்த ரயில் நிலையத்தை குறித்த நேரத்தில் அடையாததால் அங்கு என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. எனவே சந்தேகத்தின் பேரில் சிலர் சம்பவ இடத்திற்கு சென்று பார்க்க கோர விபத்து நடந்துள்ளது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டடு. ஏராளமான மீட்புப்படையினர் மற்றும், விமானப்படையினர் மீட்புப்பணியில் ஈடுபட பொதுமக்களும் இதில் இறங்கினர்.



    தற்போது வரை சுமார் 288 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் 1000க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் ஒடிசாவின் தலைமை செயலாளர் அறிவித்துள்ளார்.


அதிர்ச்சி: விபத்தில் இறந்தவர்களின் உடல்கள் தண்டவாள பக்கவாட்டில் சிதறி கிடந்துள்ளன.. படுகாயம் அடைந்தவர்கள் நகர முடியாமல் ரத்த வெள்ளத்தில் முனகியபடி இருந்திருக்கிறார்கள்.. நொறுங்கிக் கிடந்த ரயில் பெட்டிகளில் சிக்கி பலர் வெளியேற முடியாமல் கதறியிருக்கிறார்கள்.. காயங்களுடன் ரயிலில் இருந்து வெளியேறியவர்கள் ரத்த வெள்ளத்தில், அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் வெறித்த பார்வையுடன் பிரமை பிடித்தது போல் உட்கார்ந்திருந்தனர்.


இந்நிலையில், விபத்து நடந்த கோர காட்சியும், அங்கு நடந்து வரும் மீட்பு பணிகள் குறித்தும் வீடியோக்கள் வெளியாகி உள்ளன.. எந்த பக்கம் திரும்பினாலும், மரண ஓலங்களை கேட்க முடிகின்றன.. அழு குரல்களும், கதறலும் அந்த பகுதியில் எதிரொலித்தது.. தீயணைப்பு படையினரும், பேரிடர் மீட்பு படையினர், போலீசார் என மொத்த பேரும் பரபரப்பாக துரித மீட்பு பணியில் இறங்கி இடுபாடுகளை அகற்றினர.



    காயமடைந்தவர்களை மீட்பதும்,   அவர்களை மருத்துவமனைக்கு தூக்கி சென்று மருத்துவ உதவிகள் செய்தனர்.

மீட்பு பணிகள் நிறைவடைந்து ரயில் சேவைகளை மீண்டும் இயக்குவதற்கான பணிகள் தொடங்கி உள்ளது

இந்த விவகாரத்தை விரிவாக விசாரித்து, எதிர்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்வோம் 

மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டி

ஒடிசா ரயில் விபத்தில் காயமடைந்த பயணிகளை மீட்டு, அவர்களுக்கு சிகிச்சை அளிக்க இந்திய ராணுவம் வரவழைக்கப்பட்டு மீட்பு பணிகள் நடைபெற்றது.

பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை, நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்

ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்த மேற்கு வங்க மக்களுக்கு தலா ரூ.5 லட்சம் வழங்கப்படும்; மீட்புப் பணிகள் முடியும் வரை ரயில்வே மற்றும் ஒடிசா அரசுடன் இணைந்து பணியாற்றுவோம்"

- மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி

ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் இரங்கல்

ரயில் விபத்தை தவிர்க்கும் 'கவாச்' தொழில்நுட்பம் ஏன் கோரமண்டல் பாதையில் இல்லை? - திரிணமூல் காங்கிரஸ் கடும் விமர்சனம்



    ரயில் விபத்து நடந்த இடத்திற்கு சென்று இருக்கும் பிரதமர் மோடி உள்ளூர் அதிகாரிகள், பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் ரயில்வே அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.

ஒடிசாவில் விபத்து நடந்த இடத்தில் உருக்குலைந்த ரயிலை பிரதமர் மோடி ஆய்வு செய்தார்.

ரயில் விபத்தில் உயிரிழந்த தமிழர்கள் குடும்பத்தினருக்கு ரூ. 5 லட்சம் இழப்பீடு

ரயில் விபத்தில் காயம் அடைந்த தமிழர்களுக்கு ரூ.1 லட்சம் நிவாரணம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

ஏற்கனவே மத்திய அரசு சார்பில் இறந்தவர்கள் குடும்பத்தினருக்கு ரூ. 10 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ. 2 லட்சமும் இழப்பீடாக அறிவிப்பு.

ஒடிசா ரயில் விபத்தில் 1,200 பேர் எந்தவித பாதிப்புமின்றி உயிர் தப்பினர்.

பெங்களூரு-ஹவுரா அதி விரைவு ரயிலில் இருந்த 1,200 பயணிகளுக்கு பாதிப்பு இல்லை

சேதம் அடைந்த பெட்டிகளை தவிர்த்து மீதம் உள்ள பெட்டிகளுடன் புறப்பட்டது ஹவுரா ரயில்-தென் கிழக்கு ரயில்வே நிர்வாகம் அறிக்கை வெளியீடு

ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் புகைப்படங்கள் ser.indianrailways.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம்.



    ஒடிசா ரயில் விபத்து மீட்பு பணி நிலவரங்கள் தொடர்பாக தமிழ்நாடு குழுவினருடன் காணொலி காட்சி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.



    பாலசோர் மருத்துவமனையில் ரத்த தானம் செய்ய குவிந்து வரும் கூட்டம் 

ரயில் விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு ரத்தம் வழங்கி உதவும் தன்னார்வலர்கள் 

நீண்ட வரிசையில் காத்திருந்து ரத்தம் வழங்கி உதவிய மனித நேயத்தின் உச்சம் இது. உங்களது நல்ல மனதிற்கு தலை வணங்குகிறோம் ஒடிசா மக்களே.

கட்டக், பாலசோர், பத்ராக்கில் இருந்து  3,000 யூனிட்டுக்கும் அதிகமான ரத்தம் சேகரிக்கப்பட்டுள்ளது

கட்டக்கில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவர் ஜெயந்த் பாண்டா அறிவிப்பு

🙏🙏🙏

🌏..உண்மை செய்திகள்..🌏