கள்ளச்சாராயம் குடித்த 6 பேர் உயிரிழப்பு .. காவலர்கள் பணி நீக்கம்

 


    மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் குடித்த 6 பேர் உயிரிழந்தனர்.


மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் அருந்தி 6 பேர் உயிரிழந்த விவகாரத்தில் 4 போலிசார் பணியிடை நீக்கம்;

உயிரிழந்த குடும்பத்தினருக்கு தலா ₹10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை.

இவ்வழக்கில் கள்ளச்சாராயம் விற்பனை செய்த அமரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார், இதர குற்றவாளிகளை தேடும் பணியில் போலீசார் தீவிரம்.

மரக்காணம் காவல் நிலைய ஆய்வாளர் அருள் வடிவழகன், உதவி ஆய்வாளர்கள் தீபன், சிவகுருநாதன், மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு ஆய்வாளர் மரியா ஆகியோர் தற்காலிக பணி நீக்கம் .

-டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு.

.          

விழுப்புரம்: மரக்காணம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 6ஆக அதிகரிப்பு

பாதிக்கப்பட்ட மண்ணாங்கட்டி புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராஜமூர்த்தி (55) உயிரிழப்பு

60 வயது மூதாட்டி மலர்விழி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

கள்ளச்சாராயம் விற்பனை - கடும் நடவடிக்கை“

கள்ளச்சாராயம் குடித்து 6 பேர் உயிரிழந்த சம்பவம் வருத்தத்திற்குரியது

கள்ளச்சாராயம் விற்றவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் பொன்முடி

போதை பொருட்களை ஒழிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது - பொன்முடி


செய்தியாளர் மு .இராமச்சந்திரன்


  🌏...உண்மை செய்திகள்...🌏