ஒரு வரிச் செய்திகள்

 



    🌹கீழடி அருங்காட்சியகத்தை குடும்பத்தினருடன் பார்வையிட்டார் நடிகர் சூர்யா

தந்தை சிவக்குமார், மனைவி ஜோதிகா மற்றும் உறவினர்கள் அருங்காட்சியகத்தை பார்த்தனர்  மற்றும் மதுரை எம். பி.சு.வெங்கடேசன் பார்வையிட்டார்.

⏩⏩⏩⏩⏩⏩⏩

    🍁அமுல் நிறுவனத்தின் பால் விலை லிட்டருக்கு ₹2 உயர்த்தப்பட்டுள்ளது!

உற்பத்தி செலவு அதிகரிப்பு காரணமாக விலை உயர்த்தப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் விளக்கம்

⏩⏩⏩⏩⏩⏩

    🍁அடுத்த ஓராண்டில் 403 கிலோ மீட்டர் மாநிலச் சாலைகள், ₹3,330 கோடி செலவில் 4 வழி சாலைகளாக மேம்படுத்தப்படவுள்ளது,சட்டப்பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு தகவல்

ஆறு மாவட்டங்களில் ரூ.238 கோடி மதிப்பில் ரயில்வே மேம்பாலங்கள் அமைக்கப்படும்"

அனைத்து கால நிலைகளிலும் தங்கு தடையற்ற போக்குவரத்து திட்டத்தின் கீழ் 273 தரைப்பாலங்கள் உயர்மட்ட பாலங்களாக ரூ.787 கோடி மதிப்பில் கட்டப்படும்"

- அமைச்சர் எ.வ.வேலு

⏩⏩⏩⏩⏩⏩

     🍁பற்களை பிடுங்கியதாக ஏஎஸ்பி மீது புகார் கூறிய 5 பேரிடம் நெல்லை சார் ஆட்சியர் விசாரணை;

மாநில மனித உரிமை ஆணையத்தில் நேற்று 6 பேர் விளக்கம் அளித்த நிலையில் இன்று 5 பேர் விசாரணைக்கு ஆஜர்

⏩⏩⏩⏩⏩⏩

🍁திருவாரூர், திருவாஞ்சியம் வாஞ்சிநாதசுவாமி திருக்கோயிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகின்றன;

பணிகள் நிறைவடைந்தவுடன் குடமுழுக்கு நடைபெறும்"

- பேரவையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் காமராஜ் கேள்விக்கு அமைச்சர் சேகர்பாபு பதில்

⏩⏩⏩⏩⏩⏩

🍁தோள்சீலை போராட்டத்தை பாடப்புத்தகத்தில் வைக்க வேண்டும்;

போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு நினைவுச்சின்னம் அமைக்க வேண்டும்"

- பேரவையில் குளச்சல் காங். உறுப்பினர் பிரின்ஸ் கோரிக்கை

⏩⏩⏩⏩⏩⏩

🍁கடந்த மாதம் சென்னை மெட்ரோ ரயில்களில் 69.99 லட்சம் பயணிகள் பயணித்துள்ளனர்;

பிப். மாதத்தை விட மார்ச் மாதத்தில் 6.30 லட்சம் பயணிகள் அதிகம்"

- சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தகவல்

⏩⏩⏩⏩⏩⏩

🍁செஞ்சி அருகே வயல்வெளியில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்து பெண் உயிரிழப்பு

* மேய்ச்சலுக்காக அந்த பெண் ஓட்டிச்சென்றபசுமாடும் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தது 

* கடந்த 5 நாட்களாக மின் கம்பி அறுந்துகிடப்பதாக கப்பை கிராமமக்கள் குற்றச்சாட்டு

⏩⏩⏩⏩⏩⏩

🍁சுங்கவரி என்ற பெயரில் இராப்பகல் கொள்ளையில் சுங்கச்சாவடிகள் ஈடுபட்டு வருகின்றன;

14 சுங்கச்சாவடிகள் அனுமதி இல்லாமல் எதிர்ப்பை மீறி அமைக்கப்பட்டுள்ளது"

- தலைமைசெயலகத்தில் தவக சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் பேட்டி

⏩⏩⏩⏩⏩⏩

🍁திருவள்ளூர்: ஊத்துக்கோட்டை அருகே காக்கவாக்கம் பகுதியில் கிருஷ்ணகுமார் என்பவரின் வீட்டில் 19 சவரன் தங்க நகை, 1 கிலோ வெள்ளி கொள்ளை - போலீசார் விசாரணை

⏩⏩⏩⏩⏩⏩

ரிஷிகளாலும் வேதங்களாலும் உருவானதுதான் இந்தியா - ஆளுநர் ஆர்.என்.ரவி


⏩⏩⏩⏩⏩⏩


செய்தியாளர் பாஸ்கர்