6 காவலர்கள் பணி நீக்கம் ....மேலும் சில செய்திகள்

 


   🔴திருப்பத்தூர்: ஓசூர் பாகலூரைச் சேர்ந்த முரளி என்பவரின் லாரி கடத்தப்பட்ட வழக்கில் லஞ்சம் வாங்கியதாக, காவல் ஆய்வாளர் உள்பட 6 காவலர்கள் பணி நீக்கம்


காவல் ஆய்வாளர் காமராஜ், உதவி ஆய்வாளர் சேகர் மற்றும் குற்றப்பிரிவு தலைமைக்காவலர் நாசர் மற்றும் காவலர்கள் கார்த்திக், அறிவுச்செல்வம், ரகுராம் ஆகியோரை பணி நீக்கம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு.

♦♦♦♦♦♦♦

🔴ராகுல் காந்திக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு மே 16ம் தேதி வரை இடைக்கால தடை

மாவட்ட நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது பாட்னா உயர்நீதிமன்றம்

நாளை ஆஜராக ராகுல் காந்திக்கு பாட்னா மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது

♦♦♦♦♦♦♦

🅾தொழில்துறை வளர்ச்சி மற்றும் உயர்கல்வியில் தமிழ்நாடு சிறந்த மாநிலமாக விளங்குகிறது

சாகர்மாலா திட்டத்தில் தமிழ்நாட்டுக்கு ₹1.4 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு 108 திட்டங்கள் அறிவிக்கப்பட்டன; இதில் 41 திட்டங்கள் நிறைவு பெற்றுள்ளன, 34 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுவருகிறது 

- சென்னையில் ஒன்றிய கப்பல் போக்குவரத்து, துறைமுகங்கள் அமைச்சர் சர்பானந்த சோனோவால் பேட்டி

♦♦♦♦♦♦♦

🅾சென்னை, ஆதம்பாக்கத்தில் சிவகாம சுந்தரி என்கிற மூதாட்டி கொலை வழக்கில் திருப்பம்

மூதாட்டிகளை குறிவைத்து கொலை செய்ததாக, வழக்கில் கைதான சக்திவேல் வாக்குமூலம்

பல லட்சம் மதிப்புள்ள பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்ததும் அம்பலம்

கே.கே.நகரில் 2 மூதாட்டிகள், ஆதம்பாக்கத்தில் சிவகாம சுந்தரி என 3 பேரை கொலை செய்ததாக வாக்குமூலம்

♦♦♦♦♦♦♦

🅾நெல்லையில் விசாரணைக்கு வந்தவர்களின் பற்களை பிடுங்கி சித்ரவதை செய்தது தொடர்பாக, மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் கொடுத்த, பாதிக்கப்பட்ட சுபாஷ் என்பவர் சிபிசிஐடி விசாரணை அதிகாரி முன் ஆஜர் ஆனார்


செய்தியாளர் கார்த்திக்