வடநாட்டு தொழிலாளர்களுக்கு காவலர் செயலி அறிமுகம்

 


   சென்னை:  வடமாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் தாக்கப்படுவதாக வதந்தி பரவிய நிலையில், சென்னை மௌண்ட் ரோட்டில் உள்ள தனியார் விடுதியில் சிந்தாதிரிப்பேட்டை காவல் ஆய்வாளர் ராஜாராம் தலைமையில் வடமாநில தொழிலாளர்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் போலீசார் தரப்பில் சிறப்பு கூட்டம் நடைபெற்றபோது எடுத்தப் படம்.

 இதில், 100-க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் பங்கேற்றனர்.



        கூட்டத்தில், காவலர் செயலி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

காவல் அதிகாரிகள் வடநாட்டு  தொழிலாளர்களிடம் இந்த காவலர் செயலி மூலம் புகார் செய்தால் 5நிமிடத்தில் உங்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும். அங்கு ஏற்படும் பிரச்சனைகளை வீடியோ எடுக்கவும் முடியும் அதனால்   நீங்கள் ஏதும் பயப்பட வேண்டாம் என்று வடநாட்டு தொழிலாளர்களுக்கு அறிவுறுத்தினர்.

வீடியோவில் பரவும் நிகழ்வு பழைய செய்திகள் இதை நம்பி யாரும் பயப்பட வேண்டாம் என்று அவர்களுக்கு விளக்கினர்.

செய்தியாளர் பாஸ்கர்


🌏-----உண்மை செய்திகள்-----🌏