பட்டாசு ஆலை தொழிலாளர்களுக்கு உதவி தொகை உயர்வு

 


        பட்டாசுஆலை 

    ⭕தொழிலாளர்களுக்கான விபத்து மரண உதவித்தொகை ரூ.1.25 லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சமாக உயர்வு- சட்டப்பேரவையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன்.

பட்டாசு, தீப்பெட்டி தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்களுக்கு விபத்து மரண உதவித்தொகை உயர்த்தப்பட்டுள்ளது. 

புலப்பெயர்ந்த கட்டுமானத் தொழிலாளர்கள் விபத்தில் உயிரிழக்க நேரிட்டால் உடலை சொந்த ஊர் எடுத்துச் செல்ல நிதியுதவி வழங்கப்படும் - அமைச்சர் சி.வி.கணேசன்.

🔑🔑🔑🔑🔑🔑🔑🔑

    ⭕லட்சத்தீவுகள் தொகுதி தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.பி. முகமது பைசலின் தகுதி நீக்க உத்தரவை திரும்பப் பெற்றது மக்களவை செயலகம்

கொலை முயற்சி வழக்கில் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த கவரட்டி நீதிமன்ற தீர்ப்புக்கு கேரள உயர் நீதிமன்றம் தடை விதித்தது; எனினும், தகுதி நீக்க உத்தரவை ரத்து செய்யாததால் முகமது பைசல் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்

    🔑🔑🔑🔑🔑🔑🔑🔑   

    🔴விசாரணைக் கைதிகளின் பல்லை பிடுங்கிய விவகாரம்:

காவல் அதிகாரியை கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்"

 - அதிமுக உறுப்பினர் இசக்கி சுப்பையா கவன ஈர்ப்பு தீர்மானம்

🔑🔑🔑🔑🔑🔑🔑🔑

    🔴விசாரணைக்கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்ட புகார் - அம்பாசமுத்திரம் ஏ.எஸ்.பி.யாக இருந்த பல்வீர் சிங் சஸ்பெண்ட் 

- சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

🔑🔑🔑🔑🔑🔑🔑🔑

    🔴அனைத்து நியாய விலைக்கடைகளிலும் கதர் பொருட்களை விற்க நடவடிக்கை எடுக்கப்படும் - சட்டப்பேரவையில் அமைச்சர் ராஜ கண்ணப்பன் அறிவிப்பு


   🔑🔑🔑🔑🔑🔑🔑

 ⭕சபாநாயகர் அப்பாவுவை சந்தித்து அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி பேச்சு; 

எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கையை ஆர்.பி.உதயகுமாருக்கு ஒதுக்க கோரிக்கை

🔑🔑🔑🔑🔑🔑🔑🔑

⭕வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் யுபிஐ எனப்படும் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை 2000 ரூபாய்க்கு மேல் செய்தால் இனி 1.1% கட்டணம் செலுத்த வேண்டும் என அறிவித்துள்ளது

🔑🔑🔑🔑🔑🔑🔑🔑

 🚉 2024 முதல் ஒரே பயண டிக்கெட்*


🚒சென்னை பெருநகரில் பேருந்து  , புறநகர் ரயில், மெட்ரோ ரயில் என அனைத்திலும் பயணம் செய்ய ஒரே இ-டிக்கெட் முறை 2024ல் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.*

அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ஒரே இ-டிக்கெட் முறை நடைமுறைக்கு வரும் என்றும் இத்திட்டத்திற்கு தனியாக செயலி உருவாக்கப்பட உள்ளதாகவும் CUMTA அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.*

🔑🔑🔑🔑🔑🔑🔑🔑

செய்தியாளர் மு.ராமச்சந்திரன்


 🌏----உண்மை செய்திகள்----🌏