பிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமி காலமானார்

 


    😢😢பிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமி உடல் நலக்குறைவு காரணமாக இன்று காலை காலமானார்.

மேடைகளில் மிமிக்ரி கலைஞராக இருந்துதமிழ் சினிமாவில் முக்கிய நகைச்சுவை நடிகரானவர் நடிகர் மயில்சாமி(57).

கில்லி, தூள், நான் அவன் இல்லை, கண்களால் கைது செய், தேவதையை கண்டேன், திருவிளையாடல் போன்ற படங்களிலும்

விவேக், வடிவேலு உள்ளிட்ட நகைச்சுவை நடிகர்களுடன் இணைந்து 250க்கும் மேற்பட்ட படங்களில்நடித்துள்ளார்.

நகைச்சுவை நடிகராகமட்டுமல்லாமல் சிறந்த குணச்சித்திர வேடங்களிலும் மயில்சாமி நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மயில்சாமி தீவிர சிவபக்தர் ஆவார்,  சிவராத்திரி அன்றே இயற்கை எய்தினார்.

2021 சட்டமன்றத் தேர்தலில் விருகம்பாக்கம் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டார் அவரது மறைவுக்கு சினிமா பிரபலங்கள் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.


நிருபர் பாஸ்கர்