இருவரிச் செய்திகள்

 


    🌷நடிகர் சூர்யாவுடனான சந்திப்பு குறித்து தமிழில் பதிவிட்ட சச்சின் டெண்டுல்கர்🍁திருப்பத்தூர் வட்டம் கசநாயக்கன்பட்டி அரசு ஆதி திராவிட நல கல்லூரி மாணவர் விடுதியை திடீர் ஆய்வு செய்து, மாணவர்களுடன் கலந்துரையாடியபடியே அவர்களுடன் அமர்ந்து இரவு உணவு அருந்தினார் அம்மாவட்ட ஆட்சித் தலைவர் பாஸ்கர பாண்டியன்

😡😡😡😡😡😡😡

👉மணப்பாறை  அருகே 11 வயது சிறுமியிடம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட 58 வயது  வெங்கடசாமியை மகளிர் போலீசார் கைது செய்து போக்சோ மற்றும் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

😡😡😡😡😡😡😡

👉ஓபிஎஸ் தரப்பு தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் வரும் 20ம் தேதி மாலை 4 மணிக்கு பதிலாக, காலை 10 மணிக்கு நடைபெறும் என ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு🌷சென்னை லலித்கலா அகடாமியில் நடைபெறும் பத்திரிக்கை புகைப்பட கலைஞர்கள் சங்கம் சார்பில் நடைபெறும் புகைப்பட கண்காட்சியினை நேரில் பார்வையிட தமிழ்நாடு காவலர் வீட்டுவசதி வாரிய தலைவர் ஏ.கே.விசுவநாதன் ஐ.பி.எஸ்  ,டி.ஜி.பி  நாள்17. 02..2023 அன்று காலை 10.45 மணிக்கு நேரில் வருகை தருகிறார்.

😡😡😡😡😡😡😡

👉டேபிள்-க்கு அடியில் மண்புழு மாதிரி ஊர்ந்து சென்றதுதான் ஆண்மையா?”


-எடப்பாடி பழனிசாமியின் பேச்சுக்கு ஈரோடு கிழக்கு தொகுதி பிரசாரத்தில் கனிமொழி எம்.பி. பதிலடி

இரட்டை இலை தாமரை இலையாக மாறிவிட்டது" - கனிமொழி எம்.பி.

😡😡😡😡😡😡😡

👉ஆடியோ புகார்-கே.பி.முனுசாமி விளக்கம்

“கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி

வெளியிட்டது எனது குரல்தான்“

“ஆனால் தேர்தல் செலவுக்காக பணம் கேட்டதை தவறாக திரித்து கூறுகின்றனர்“ 

“ஆடியோ வீடியோ எதை வெளியிட்டாலும் பயப்படப் போவதில்லை

😡😡😡😡😡😡😡

💐சிறந்த காவல்நிலையத்திற்கான விருது


திருச்சி முசிறி காவல்நிலையத்திற்கு,

மத்திய உள்துறை அமைச்சகத்தின் 

சிறந்த காவல்நிலையத்திற்கான

உள்துறை விருது வழங்கப்பட்டுள்ளது🍁சேலம் மாவட்டத்தில் 2வது நாளாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு நலத்திட்டங்களின் செயல்பாடு குறித்து ஆய்வு; அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்பு

அரசு அதிகாரிகளின் திறமையான பணி மூலம் மாவட்டத்தின் வளர்ச்சியை பார்க்க முடியும்

மாநில மக்கள் பயனடையும் வகையில் திட்டங்களை விரைந்து செயல்படுத்த வேண்டும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

😡😡😡😡😡😡😡

👉சென்னை தாம்பரம் அடுத்த சந்தோஷபுரத்தில் தனியார் நிறுவன பெண் அதிகாரி ஜெயந்தி(31) தூக்கிட்டு தற்கொலை;

அடுத்த மாதம் திருமணம் நடைபெற இருந்த நிலையில், கடன் பிரச்சனையால் விபரீத முடிவு - சேலையூர் போலீஸ் விசாரணை

 😡😡😡😡😡😡😡

  👉 தொலைதூர பேருந்துகள் நிறுத்தப்படும் ஓட்டலில் ஓட்டுநர், நடத்துனருக்கு தனி அறையில் உணவு தரக்கூடாது; பயணிகளுக்கு வழங்கும் அறையிலேயே ஓட்டுநர், நடத்துநருக்கு உணவு வழங்கலாம்

- அரசு போக்குவரத்துக் கழகம் அறிவுரை

😡😡😡😡😡😡😡

  🍁மதுரை அலங்காநல்லூர் கீழக்கரை கிராமத்தில் அரசுக்கு சொந்தமான 66 ஏக்கர் இடத்தில், ரூ.44 கோடியில் பிரமாண்ட ஜல்லிக்கட்டு அரங்கம் அமைக்க டெண்டர் வெளியீடு; அரங்கம் கட்டும் பணியை 2 ஆண்டுகளுக்குள் முடிக்க உத்தரவு
 🌷தேசிய வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி (NABARD) தலைவரை சந்தித்து ஆலோசனை நடத்தியிருந்தேன்

தமிழ்நாட்டுக்கு கூடுதலாக ₹400 கோடியை ஒதுக்கியுள்ளது; 2023 நிதியாண்டுக்கான நிதி ஒதுக்கீடு ₹3100 கோடியாக அதிகரிப்பு

- நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தகவல்

😡😡😡😡😡😡😡

💐ஜார்க்கண்ட் அற்புதமான மாநிலம், அதிகமான பழங்குடி, தாழ்த்தப்பட்ட மக்கள் வாழ்கின்ற மாநிலம்; 

அவர்களுக்கு உழைக்கின்ற வாய்ப்பை எனக்கு வழங்கியுள்ளனர்"

- சென்னையில் சி.பி.ராதாகிருஷ்ணன் பேட்டி

😡😡😡😡😡😡😡

🍁கேரளா - கொச்சி : குடிபோதையில் பேருந்துகளை ஓட்டிய 16 ஓட்டுநர்களுக்கு 

'இனி குடித்துவிட்டு பேருந்து ஓட்ட மாட்டேன்' என 1000 தடவை எழுத வைத்து கேரள போலீசார் நூதன தண்டனை

😡😡😡😡😡😡😡

செய்தியாளர் கார்த்திக்