💐(18.02.2023)அன்று மாலை 5 மணிக்கு சிந்தனை சிற்பிதோழர்.சிங்காரவேலரின் 164 -ஆவது பிறந்தநாள் நிகழ்ச்சி
மற்றும் வழக்கறிஞர் தோழர் லிங்கன் S.பாஸ்டின் அவர்களை கௌரவிக்கும் நிகழ்ச்சியும் தி.நகர் தெற்கு போக் சாலையில் அமைந்துள்ள பாலன் இல்லத்தில் அவரது படத்திற்கு மலர்தூவி , மரியாதை செலுத்தி தியாகத்தை நினைவு கூறும் வகையில் நமது இந்திய கலாச்சார நட்புறவு கழக (ISCUF) ஒன்றிணைந்து சென்னை மாவட்டம் சார்பாக.நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு மூத்த வழக்கறிஞர் மாவட்ட தலைமைக் குழு உறுப்பினர் தோழர்.க.தேசிங் அவர்கள் தலைமை தாங்கக் கேட்டு கராத்தே திரு.மூ.சீனிவாசன் முன்மொழிய,திருமதி P.கீதா வழிமொழிய தோழர்.சிங்காரவேலரின் படத்திற்கு மலர் தூவி , வீரவணக்கம் செய்து ; அவரது தியாகங்களையும் பொதுவுடைமை-மூடநம்பிக்கை-நம்பிக்கை சம்பந்தமான முற்போக்கு சிந்தனைகளை தொடர்ந்து மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் பணியினை அயராது செய்துவரும் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் தோழர்.லிங்கன் S.பாஸ்டின் அவர்களை கௌரவிக்கும் வகையில் அவருக்கு மூத்த தோழர்.V.K.கோபாலன் அவர்கள் சால்வை அணிவிக்க தோழர்.க.தேசிங் அவர்கள் புத்தர் சிலை பரிசலிக்க நிகழ்ச்சி ஆரம்பமானது.
தேனி மாவட்ட இஸ்கஃப் உறுப்பினர் இளம் வழக்கறிஞர் திரு . மணிகண்டனின் மறைவு ,சிரியா-துருக்கியில் நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர்,கடந்த சில நாட்களுக்குள் உயிர்நீத்த பிரபல பாடகர் திருமதி.வாணிஜெயராமன் மற்றும் சமூக ஆர்வலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் தீர்மானத்தை திரு.கோவிந்தராஜன் அவர்கள் வாசித்தார்.மாவட்ட செயலாளர் வரவேற்புரையாற்ற மூத்த தோழர்.V.K.கோபாலன்,மூத்த இதழாளர்.இசைக்கம்மணி, ஏஐடியுசி தொழிற்சங்க மாநில செயலாளர் தோழர். அ.பாஸ்கர், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் ஆர்.கிருஷ்ணகுமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாநில செயலாளர் தோழர். க.பாரதி சிறப்புரையாற்றினார்.ஏற்புரை தோழர் S. லிங்கன் S.பாஸ்டின் நிகழ்த்தினார்.
தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற மாநிலக்கூட்டத்திற்கு இஸ்கஃப் சார்பாக மாவட்ட பொருளாளர் தோழர்.ஆர்.எஸ்.மாதவன் ரூபாய் 1000/- மும்,இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் சார்பாக திரு.ஆர்.கிருஷ்ணகுமார் ரூபாய் 1000 மும் தகஇபெ மாவட்ட செயலாளர் திரு.கணபதிஇளங்கோ அவர்களிடம் வழங்கினர்.மாவட்ட நிர்வாகிகள் கராத்தே திரு.மூ.சீனிவாசன்,திரு.மு.இராமச்சந்திரன்,திரு.ராஜவேலு,திரு.வெங்கடேசன் மற்றும் பத்திக் கையாளர் திரு.அருண்அசோகன்,திருமதி.கீதா,திரு.ஏழுமலை ஆகியோர் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியின் நிறைவில் கலந்துகொண்ட அனைவருக்கும், நிகழ்ச்சிக்கு இடமளித்த தமிழ்மாநிலக்குழுவிற்கும் மாவட்ட தலைவர் தோழர்.க.தமிழ்மது நன்றி கூறினார்.
செய்தியாளர் மு.இராமச்சந்திரன்
🌏-----உண்மை செய்திகள்------🌏