இருவரிச் செய்திகள்

 


        🌺உடல் நலக்குறைவு காரணமாக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தோழர் நல்லகண்ணு அனுமதி;*

சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அவரை மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்தார்.

♦♦♦♦♦♦


🌺பிப். 1 முதல் 'கள ஆய்வில் முதலமைச்சர்'


"கள ஆய்வில் முதலமைச்சர்" என்ற புதிய திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 

பிப்ரவரி 1 மற்றும் 2ம் தேதிகளில் முதற்கட்டமாக வேலூரில் சுற்றுப்பயணம்


🌹சென்னை, கலைஞர் நகர், ESI மருத்துவமனை அருகே, மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் அரசு புனர்வாழ்வு மருத்துமனையின் புதிய ஒப்புயர்வு மையக் கட்டடத்தை திறந்து வைத்து, நலத்திட்ட உதவிகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

♦♦♦♦♦♦

🌺நடிகர் ரஜினியின் ஒப்புதல் இல்லாமல் அவரது பெயர், புகைப்படம், குரல் பயன்படுத்த தடை

"பயன்படுத்தினால் உரிமையியல் மற்றும் குற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும்"

நடிகர் ரஜினி சார்பில் வழக்கறிஞர் இளம் பாரதி பொது அறிவிப்பு

♦♦♦♦♦♦

🙏உதகை அருகே மாயார் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியின் பவள விழாவில் 70 ஆண்டுகளுக்கு பின் சந்தித்து கொண்ட முன்னாள் மாணவர்கள்

நீண்ட வருடங்களுக்கு பின் நண்பர்களை சந்தித்ததால், தங்களது இனிய பள்ளிக் கால நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்

♦♦♦♦♦♦

🙏பழனி முருகன் கோவிலில் 48 நாட்கள் மண்டலாபிஷேக பூஜை , தைப்பூசத் திருவிழாவை ஆகம விதிப்படி நடத்த அனுமதி

இந்து சமய அறநிலையத் துறை தரப்பு உத்தரவாதத்தை ஏற்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

♦♦♦♦♦♦

😭சென்னை, கொண்டித்தோப்பு கோயில் குளத்தின் சேற்றில் சிக்கி நாராயணன் என்பவர் உயிரிழப்பு 

கோயில் குளத்தை தூர்வாரும் பணியின் போது சேற்றில் சிக்கி உயிரிழப்பு

♦♦♦♦♦♦

💢💢3 நாட்களில் ₹313 கோடி வசூலை அள்ளிய ஷாருக்கானின் ‘பதான்’ திரைப்படம்

♦♦♦♦♦♦


💗புதுச்சேரி: கழுவேலி, ஊசுடு ஏரியில்  பறவைகள் கணக்கெடுப்பு நடக்கவுள்ளது. இதையொட்டி, புதுச்சேரி ஊசுடு பறவைகள் சரணாலயத்தில்  மாதிரி கணக்கெடுப்பு நடைபெற்றது.

♦♦♦♦♦♦


👷செங்கல்பட்டு அருகே காரில் கடத்தி வரப்பட்ட ₹2 லட்சம் மதிப்பிலான 57-கிலோ எடை கொண்ட குட்கா பொருட்கள் பறிமுதல் - முருகப்பன் (50), சங்கர்(43) என்ற இருவர் கைது.

♦♦♦♦♦♦

🌺பொதுக்குழு விவகாரம் - 30ம் தேதி விசாரணை

அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்ய கோரி - ஈபிஎஸ் தரப்பு மனு

முறையீடு பட்டியலில் இடம்பெற்றதால் வரும் திங்கட்கிழமை விசாரணைக்கு  - உச்சநீதிமன்றம் அனுமதி

♦♦♦♦♦♦

🌺உடலை வாங்க சம்மதம் தெரிவித்த பெற்றோர் 

* அண்ணா சாலையில் சுவர் இடிந்து இளம் பெண் பத்மப்ரியா மரணம் அடைந்த விவகாரம்

குற்றவாளிகளை கைது செய்வோம் என காவல்துறை உறுதி அளித்ததை தொடர்ந்து உடலை வாங்கி செல்ல பெற்றோர் ஒப்புதல்

♦♦♦♦♦♦

🌷போதைப்பொருள் விற்பனை செய்த வழக்குகளில் ஜாமீன் கோரிய மனுக்களை விசாரித்தபோது தமிழ்நாடு அரசை பாராட்டிய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி.

♦♦♦♦♦♦


🌺மதுரையில் நமக்கு நாமே திட்டம் மற்றும் எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கட்டப்பட்ட ஒருங்கிணைந்த படிப்பக வளாகத்தை அமைச்சர்கள் மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் திறந்துவைத்தனர்

♦♦♦♦♦♦

🍁ஈரோடு தேர்தலில் பாஜக நிலைப்பாடு என்ன? 

 ஈரோடு இடைத்தேர்தல் தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் வரும் 31ஆம் தேதி சென்னை தி.நகரில் ஆலோசனை நடைபெறள்ளது

♦♦♦♦♦♦

🍁சர்வதேச ஜி20 மாநாடு காரணமாக, பிப்ரவரி 1ம் தேதி மாமல்லபுரத்தில் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி இல்லை - தொல்லியல் துறை அறிவிப்பு

மாநாட்டிற்கு அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா உள்ளிட்ட நாடுகளில் இருந்து பிரதிநிதிகள் வர உள்ளதால், பாதுகாப்பு கருதி நடவடிக்கை

♦♦♦♦♦♦


🌹காஷ்மீர்: இந்திய ஒற்றுமை பயணத்தில் காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி

ராகுல் காந்தியின் நடைப்பயண நிறைவு விழாவுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க கோரி ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கடிதம்.

♦♦♦♦♦♦


🌺ஓமனில் உள்ள மசூதிக்கு ஹிஜாப் அணிந்து சென்ற எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன்

♦♦♦♦♦♦

செய்தியாளர் பானு