விடுமுறை மதுபான கடைகளுக்கு 6 நாட்கள் ஆட்சியாளர் அறிவிப்பு

 


        திருவண்ணாமலை தீப திருவிழாவை முன்னிட்டு இன்று முதல் ஆறு நாட்கள் மது கடைகளுக்கு விடுமுறை


திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 27-ஆம் தேதி கொடியேற்றத்துடன் விமர்சையாக தொடங்கியது.  10 நாட்கள் இந்த விழா வெகு சிறப்பாக  கொண்டாடப்படுகிறது  


 திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆட்சியர் முருகேஷ் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு டிசம்பர் 6ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து இருந்தார்.

அதன்படி திருவண்ணாமலை நகரில் காமராஜர் சிலை, வேங்கிக்கால் ஏரிக்கரை, புறவழிச்சாலை, நல்லவன்பாளையம் மற்றும் திருவண்ணாமலை நகரின் உள்பகுதியில் இயங்கும் டாஸ்மாக் கடைகள், மதுக்கூடங்களுடன் இணைந்த ஹோட்டல்களான திரிசூல், நளா, அஷ்ரேய்யா, அருணாச்சலா, வேங்கிக்கால் பகுதியில் இயங்கி வரும் முன்னாள் ராணுவ வீரர்களுக்கான அங்காடி மதுக்கடைகள் ஆகிய அனைத்திற்கும் இன்று முதல் டிச.7 ஆம் தேதி வரை 6 நாட்கள் விடுமுறை அறிவித்து ஆட்சியர் உத்தரவு.


செய்தியாளர் மணிவண்ணன்