2023 ஆங்கில வருட ராசிபலன்கள்   

2023ல்.. விரும்பிய இடத்தில் திருமண வாழ்க்கை.. யாருக்கு காத்து கொண்டிருக்கிறது?


 

2023 ஆங்கில வருட ராசிபலன்கள்


எந்தெந்த ராசிக்காரர்களுக்கு திருமணம் கைகூடும்?

💑திருமணம் என்பது பூலோகத்தில் நிச்சயிக்கப்படுவது அல்ல அவை சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட ஒன்றாகும். திருமணத்தில் இரு வேறு மனங்கள் ஒருசேர சங்கமித்து, இரு உடல் ஓர் உயிராக உருப்பெறுவதே திருமணம் ஆகும். ஒருவர் திருமணத்தின் மூலம் தங்களது வம்சத்தை விருத்தி செய்வது மட்டுமின்றி தங்களுடன் இருக்கக்கூடிய துணையையும், நம்பிக்கையையும் வாழ்நாள் முழுக்க தேர்ந்தெடுப்பதாகும்.


💑திருமணம் என்பது ஒருவரின் வாழ்நாளில் மிகப்பெரிய ஒரு மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு புதிய அத்தியாயம் கூட. ஏனெனில் இதுவரை நமக்கு தொடர்பு இல்லாத ஒரு நபருடன் நமது வாழ்நாளில் மீதி இருக்கக்கூடிய நாட்களை அவர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். அவ்வாறு இருக்கையில் நமது வாழ்க்கையின் சரிபாதியை பகிர்ந்து கொள்ளக் கூடியவர்களின் தன்மைகளை அறிந்து அதற்கு தகுந்தாற்போல் நாமும் சில மாற்றங்களை நம் வாழ்வில் உருவாக்கிக்கொள்ள வேண்டும்.


💑திருமணத்தில் இருமனங்கள் ஒன்றிணைந்து மாற்றங்களை ஏற்றுக்கொள்வதன் மூலம் இருவருக்கும் சுபிட்சமான மணவாழ்க்கையானது தேனின் சுவையில் மதி மயங்கி நிற்கும் வண்டினை போன்ற ஒரு இன்பமான வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கக்கூடியதாகும்


💑திருமணத்தின் போது என்னுள் பாதி நீ, உன்னுள் பாதி நான்... உன் சுக, துக்கங்கள் அனைத்திலும் நான் பங்கு கொள்வேன் எனும் உறுதிமொழியினை தனது துணைக்கு இருவரும் தருகின்றனர். அதுபோல வாழ்வின் இறுதிவரை இருவரும் ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு தங்களது வாழ்வை முன்னேற்றி கொண்டு செல்ல வேண்டும். திருமண வாழ்வில் ஒருவருக்கு ஒருவர் ஆதரவாகவும், எந்நிலையிலும் எந்த சூழலிலும் உதவக்கூடியவராகவும் விளங்க வேண்டும்.


💑ஒருவரின் முகத்தில் காணும் மகிழ்ச்சியை கொண்டு இன்னொருவர் மகிழ்ச்சி அடைவது இந்த திருமண பந்தத்தில் தான். வீட்டை கட்டிப்பார், கல்யாணத்தை நடத்திப்பார் என்று ஆதிகாலம் தொட்டு பெரியோர்கள் பலர் கூறக்கேட்டிருக்கிறோம். திருமணம் செய்து கொள்வதற்கு நமது ஜாதகத்தின்படி திருமணயோக அமைப்பு இருந்தால் தான் இல்வாழ்க்கையில் அடியெடுத்து வைக்க முடியும்.💑பிறக்க இருக்கும் 2023ஆம் ஆண்டில் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு திருமணம் கைகூடும்?


மேஷ ராசி :


💑திருமணம் சார்ந்த செயல்பாடுகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.


ரிஷப ராசி :


💑திருமணத்தில் இருந்துவந்த ஆர்வமின்மை விலகும்.


மிதுன ராசி :


💑எண்ணிய இல்லற வாழ்க்கை முயற்சிக்கேற்ப அமையும்.


கடக ராசி :


💑திருமணம் தொடர்பான முயற்சிகளில் அலைச்சல்கள் உண்டாகும்.


சிம்ம ராசி :


💑திருமணம் சார்ந்த எண்ணங்கள் கைகூடுவதற்கான வாய்ப்புகள் அமையும்.


கன்னி ராசி :


💑திருமணம் தொடர்பான முயற்சிகளில் சிந்தித்து செயல்படவும்.


துலாம் ராசி :


💑செய்கின்ற முயற்சிக்கு ஏற்ப திருமண வாழ்க்கை அமையும்.


விருச்சிக ராசி :


💑மனதிற்கு விரும்பிய இடத்தில் திருமண வாழ்க்கை அமையும்.


தனுசு ராசி :


💑திருமணம் தொடர்பான முயற்சிகளில் காலதாமதமான முடிவுகள் கிடைக்கும்.


மகர ராசி :


💑உறவினர்கள் வழியில் ஒத்துழைப்பான சூழல் உண்டாகும்.


கும்ப ராசி :


💑மனதிற்கு விரும்பிய இடத்தில் திருமண வாழ்க்கை அமையும்.


மீன ராசி :


💑எதிர்பாராத சிலருடைய உதவிகளின் மூலம் மனம் விரும்பிய இல்வாழ்க்கை அமையும்.


 

💐🥰💐🥰💐🥰💐


மோகனா  செல்வராஜ்