சிலை கடத்தல் சிறை தண்டனை ....ஒருவரி செய்திகள்

 


சிலை கடத்தல் - 6 பேருக்கு சிறை


அரியலூர் அருகே சுத்தமல்லியில் வரதராஜ பெருமாள் கோயிலுக்கு சொந்தமான 20 சிலைகள் திருடப்பட்ட வழக்கு

சர்வதேச சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் சந்திர கபூர் உள்ளிட்ட 3 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை

🌴🌴🌴🌴🌴🌴

     👉 2 நாள் மழைக்கே இற்றுப்போன தமிழ்நாடு.வாய்ச்சொல் வீரர்களால் அல்லலுறும் பொதுமக்கள்; 


அரசை நம்பாமல் மக்கள் தங்களை தாங்களே பாதுகாத்துக்கொள்ள வேண்டும்


- எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதலமைச்சர்

🌴🌴🌴🌴🌴🌴

 👉ஒரு நாள் மழைக்கே சென்னை மாநகரம் வெள்ள நீரில் தத்தளிக்கிறது;


வடிகால் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுவதால் மழைநீர் வெளியேற முடியாமல் சாலைகளில் பாய்ந்து ஓடுகிறது

- விஜயகாந்த்,தேமுதிக தலைவர்

🌴🌴🌴🌴🌴🌴

    👉கனியாமூர் கலவரம் - 13 பேர் மீது குண்டாஸ்


கள்ளக்குறிச்சி கனியாமூர் கலவர வழக்கில் கைது செய்யப்பட்ட 13 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் உத்தரவு

🌴🌴🌴🌴🌴🌴

    💐💐இந்திய அணி த்ரில் வெற்றி.


டி20 உலகக் கோப்பை: வங்கதேச அணியை 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, இந்திய அணி த்ரில் வெற்றி.

🌴🌴🌴🌴🌴🌴

    👉தமிழ்நாடு முழுவதும் சீமைக்கருவேல மரங்களை அகற்றக்கோரி வழக்கு தொடர்ந்த விவகாரம்:


"சீமைக்கருவேல மரங்களை அப்புறப்படுத்த விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன;


ரூ. 45 லட்சம் செலவில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்பட்டுள்ளன"

- ஊரக வளர்ச்சித் துறை

🌴🌴🌴🌴🌴🌴

    👉எந்த நாட்டிற்கு? என்ன வேலைக்காக? யார் நிறுவனத்திற்கு? செல்கிறீர்கள் என்பதை பதிவுசெய்யவும்;


பதிவு செய்துவிட்டுச் சென்றால் அரசு கண்காணித்து உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கும்"

- செஞ்சி மஸ்தான், அமைச்சர்

🌴🌴🌴🌴🌴🌴

    🌷🌷மீண்டும் இஸ்ரேல் பிரதமராகிறார் நெதன்யாகு

மீண்டும் இஸ்ரேல் பிரதமராகிறார், பெஞ்சமின் நெதன்யாகு 


85 சதவீதம் வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்ட நிலையில் நெதன்யாகு தொடர்ந்து முன்னிலை

🌴🌴🌴🌴🌴🌴

    👉சென்னை முழுவதும் 50 தீயணைப்பு  வாகனங்கள் தயார் நிலையில் உள்ளது; 

ஒரு தீயணைப்பு அலுவலகத்திற்கு 2 ரப்பர் படகு தயார் நிலையில் இருக்கிறது

- எஸ். தனபால் ,உதவி மாவட்ட அலுவலர்

🌴🌴🌴🌴🌴🌴

    👉திமுக ஆட்சிக்கு வந்த பின்பு அரசு ஐ.டி.ஐ.க்களில் 93.79% ஆக மாணவர் சேர்க்கை நடந்துள்ளது. குறிப்பாக 51 அரசு ஐ.டி.ஐ.க்களில் 100% மாணவர் சேர்க்கை நடந்துள்ளது


நான் முதல்வன் திட்டத்தின் கீழ் அளிக்கப்படும் நவீன தொழில்நுட்ப பயிற்சிகளே இதற்கு காரணம் - அமைச்சர் சி.வி.கணேசன்

🌴🌴🌴🌴🌴🌴

செய்தியாளர் கார்த்திக்