தமிழை காக்க தவறினால் நாட்டிற்கே நஷ்டம் -காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரை


      💐வாரணாசியில் நடக்கும் ‘காசி தமிழ் சங்கமம்’ நிகழ்ச்சியில் இளையராஜா எம்.பி-உடன் பிரதமர் மோடி சந்திப்பு

பிரதமர் மோடியை பார்த்து வியந்து வியந்து வியந்து வியந்து கொண்டிருக்கிறேன்” - வாரணாசியில்   நடைபெற்ற காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் இளையராஜா எம்.பி. பேச்சு    உத்தரப்பிரதேசத்தில் உள்ள பனாரஸ் பல்கலைக்கழகத்தில் மகாகவி பாரதியாருக்கு தனியார இருக்கை உருவாக்கப்படும் என்று காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி அறிவித்தார்.

 

இந்த நிகழ்ச்சியில் பல்துறை அறிஞர்கள் பங்கேற்கும் விதத்தில் தமிழகத்தில் இருந்து காசிக்கு 13 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இந்த ரயிலில் தமிழகத்தைச் சேர்ந்த 2,592 பிரதிநிதிகள் பயணிக்க உள்ளனர்.காசி-தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்காக பிரதமர் மோடி  வாரணாசிக்கு வருகை வந்துள்ளார். கடந்த 17ம் தேதி காசி தமிழ்சங்கமம் தொடங்கினாலும், முறைப்படி 19ம்தேதி பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

காசிக்கும், தமிழகத்துக்கும் இடையிலான தொடர்பை வெளிப்படுத்தும் வகையில் காசி தமிழ் சங்ககமும் நடத்தப்படுகிறது. காசிக்கும், தமிழகத்துக்கும் இடையிலான தொடர்புகளை வெளிக்கொண்டுவரும் வகையில் அறிஞர்கள் இடையே கல்வி சார் பரிமாற்றங்கள், ஆக்கப்பூர்வமான கருத்தரங்குகள், ஆலோசனைக் கூட்டங்கள், பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன.காசிக்கும், தமிழகத்துக்கும் இடையே தொண்மையான தொடர்பு உள்ளது. சங்கம் என்பது நம்முடைய நாட்டில் மிகப்பெரிய பங்களிப்பையும் செய்துள்ளது. நதிகள், அறிவு, சிந்தனைகள் அனைத்தும் சங்கத்தில் அடங்கும். இந்த சங்கமம் நிகழ்ச்சிதான், இந்தியாவில் உள்ள பல்வேறுபட்ட கலாச்சாரங்களின் கொண்டாட்டங்களாகும்.

தமிழகத்தின் புகழ்பெற்ற மகாகவி பாரதியார் காசி நகரில் பல ஆண்டுகள் வாழ்ந்தார். இங்குள்ள கல்லூரியில் படித்தார். தமிழகத்தின் புகழ்பெற்ற பாரதியாருக்கு பனாராஸ் பல்கலைக்கழகத்தில் தனியாக இருக்கை உருவாக்கப்படும்.காசியைச் சேர்ந்த மக்களும், தமிழகத்தைச் சேர்ந்த மக்களும் சங்கமிக்கும் இந்த இடம் கங்கை, யமுனைப்போல் புனிதமானது. ஆன்மீக நகரம், கலாச்சாரத் தலைநகரம் காசி, தமிழகம் பழமையான வரலாறு இருக்கிறது.

கடந்த 1000 ஆண்டுகளாக கலாச்சார ஒற்றுமையை பின்பற்றி வரும் நாடு இந்தியா. காசி நகரம் உருவாக்கத்தில் தமிழகம் முக்கியப் பங்கு வகிக்கிறது. தமிழகத்தின் டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பனாராஸ் பல்கலைக்கழகத்துக்கு ஏராளமான பங்களிப்புகளைச் செய்துள்ளார். அங்கு துணைவேந்தராகவும் ராதாகிருஷ்ணன் இருந்துள்ளார்.

கலாச்சாரம் மற்றும் நாகரீகத்தின் மையங்களாக தமிழகமும், காசியும்எப்போதும் இருக்கும். இரு மண்டலங்களிலும் பழமையான மொழிகளான சமஸ்கிருதம், தமிழ் உள்ளன.தமிழின் பெருமையை வளர்க்க வேண்டும்"

உலகிலேயே பழமையான மொழியான தமிழின் பெருமையை நாம் வளர்க்க வேண்டும் - 

நாட்டின் 130 கோடி மக்களும் தமிழ் மொழியை காண வேண்டும், அதை பாதுகாக்க வேண்டும்

உலகின் மிக பழமையான மொழிகளுள் ஒன்றான தமிழ் மொழிக்கு இந்தியா தான் வீடு;

இந்த மொழியை வலுப்படுத்த நாம் உழைக்க வேண்டும். தமிழை காக்க தவறினால் நாட்டிற்கே நஷ்டம்”- காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரை.

 🙏காசிக்கும் தமிழகத்துக்கும் இடையேயான பந்தம் ஆண்டாண்டு கால பந்தமாகும்.

- மத்திய இணையமைச்சர் எல்.முருகன்

இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், இசையமைப்பாளர் இளையராஜா, ஆளுநர் ஆனந்திபென் படேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.🌷🌷திருக்குறள் மொழிபெயர்ப்பு புத்தகத்தை வெளியிட்டார் பிரதமர் மோடி. 13 மொழிகளில் மொழிபெயர்ப்பு  செய்யப்பட்டு வெளியீடு .


செய்தியாளர் பாஸ்கர்