அதிமுக ஆட்சியில் தமிழ்நாட்டை சீரழித்தனர் முதல்வர்

 


        👉அதிமுகவின் 10 ஆண்டுகால ஆட்சியில் சென்னை மட்டுமல்ல தமிழ்நாட்டையே சீரழித்து விட்டனர் 


அதையெல்லாம் சீராக்கவே பல ஆண்டுகள் ஆகும்; நாங்கள் ஒன்றரை ஆண்டுகளில் சரி செய்துவிடுவோம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

🗼🗼🗼🗼🗼🗼

👉சென்னை, எழிலகத்தில் உள்ள அவசரகால செயல்பாட்டு மையத்திற்கு வந்த வீடியோ கால் அழைப்பில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்

🗼🗼🗼🗼🗼🗼

🙏இராஜா ராஜா சோழன் பிறந்தநாள் இனி அரசு விழாவாக கொண்டாடப்படும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

🗼🗼🗼🗼🗼🗼

    👉உலகில் எந்த மொழியை வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளுங்கள்; ஆனால், தாய்மொழியை விட்டுவிடாதீர்கள் - மத்திய அமைச்சர் அமித்ஷா


ஆங்கிலம் தெரியவில்லை என்பதற்காக யாரும் தாழ்வு மனப்பான்மை கொள்ள வேண்டாம் - மத்திய அமைச்சர் அமித்ஷா

🗼🗼🗼🗼🗼🗼

      👉சிறு மோதல் சம்பவங்கள் கூட இல்லாத வகையில் தேவர் ஜெயந்தி பாதுகாப்பு ஏற்பாடுகளை சிறப்பாக செய்து முடித்துள்ளீர்கள்


அனைத்து அதிகாரிகளுக்கும், காவலர்களுக்கும் என் மனமார்ந்த பாராட்டுகள் மற்றும் நன்றிகள் - டி.ஜி.பி. சைலேந்திர பாபு

🗼🗼🗼🗼🗼🗼

'     👉போன் பே’ நிறுவனம் தொடர்ந்த வழக்கில், பணபரிவர்த்தனை சேவைகளை வழங்க ‘மொபைல் பே’ நிறுவனத்துக்கு விதிக்கபட்ட இடைக்கால தடை நீட்டிப்பு - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு


தங்கள் நிறுவன வர்த்தக சின்னத்தை போல உள்ளதால், மொபைல் பே செயலிக்கு தடை விதிக்கக்கோரி ‘போன் பே’ வழக்கு

🗼🗼🗼🗼🗼🗼

    👉அதிமுகவை இயக்க வேண்டிய அவசியம் பாஜகவுக்கு இல்லை.தேர்தல் சமயத்தில் மட்டுமே கூட்டணி;


திமுகவுடன் அண்ணன்,தம்பி உறவு எல்லாம் 1972லேயே முடிந்துவிட்டது.திமுக தான் எங்கள் பகையாளி”

-முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

🗼🗼🗼🗼🗼🗼

    👉எப்போதும் மழை நீர் தேங்கும் வால் டாக்ஸ் சாலையில் இன்று மழைநீர் தேங்கவில்லை;


சென்னையில் போர்க்கால அடிப்படையில் ராணுவத்தை போல் மாநகராட்சி பணியாளர்கள் பணி மேற்கொண்டு வருகின்றனர்

- அமைச்சர் சேகர் பாபு

🗼🗼🗼🗼🗼🗼

    👉ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்ப பெறுமாறு குடியரசு தலைவரிடம் மனு அளிக்க திமுக முடிவு


திமுக மற்றும் ஒத்த கருத்துடைய எம்.பி.க்களுக்கு திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் டி.ஆர்.பாலு அழைப்பு

🗼🗼🗼🗼🗼🗼


செய்தியாளர் பாஸ்கர்