மழை பாதிப்பு ரூ.1000 வழங்க உத்தரவு

 


        மழை பாதிப்பு ரூ.1000 வழங்க உத்தரவு


மயிலாடுதுறை: சீர்காழி, தரங்கம்பாடி வட்டங்களில் குடும்ப அட்டைதாரர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.1000 வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.


கடும் மழையால் சேதமடைந்த பயிர்கள் முறையாக கணக்கீடு செய்யப்பட்டு உரிய நிவாரணம் வழங்கப்படும் - முதல்வர் ஸ்டாலின்.


மயிலாடுதுறை: சீர்காழியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாய், போர்வை, அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.“மக்கள் எதிர்பார்க்கும் நிவாரணம் கிடைக்கும்" - முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு.


சீர்காழி, மயிலாடுதுறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது

மழை பாதிப்புகளை ஆய்வு செய்த பின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி

அமைச்சர்களை உடனடியாக அனுப்பி மீட்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன

எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு குறித்து கவலையில்லை; அரசின் நடவடிக்கையால் மக்கள் மகிழ்ச்சி

மக்கள் தெரிவித்த சில குறைகளும் உடனடியாக தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.


செய்தியாளர் பானு