ஒரு வரிச் செய்திகள்

 


      👉இங்கிலாந்து பிரதமராக பதவியேற்ற 45 நாட்களிலேயே தனது பதவியை ராஜினாமா செய்தார் லிஸ் ட்ரஸ்

அரசியல் மற்றும் பொருளாதார குழப்பம் நீடித்து வரும் நிலையில் லிஸ் டிரஸ் பதவி விலகியுள்ளார்.

🍀🍀🍀🍀🍀🍀

    👉தட்டச்சு தேர்வை பழைய முறைப்படி நடத்தும் படி தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரிய வழக்கு:


புதிய முறைபடி தாள்-1ல் லெட்டர் & ஸ்டேட்மெண்ட் தேர்வும், தாள்-2ல் ஸ்பீடு தேர்வும்  இருக்கும்படி அமைக்க வேண்டும்

-உயர்நீதிமன்ற மதுரை கிளை

🍀🍀🍀🍀🍀🍀

    👮தமிழ்நாட்டில் செல்போன் பேசிய படி வண்டி ஓட்டினால் முதல் முறை ரூ.1000 அபராதம்" - போக்குவரத்து கூடுதல் ஆணையர் 

 கபில்குமார் சரட்க்கர்

🍀🍀🍀🍀🍀🍀

    👉நவம்பர் 1 உள்ளாட்சி தினத்தை கொண்டாடும் வகையில் தமிழகத்தில் உள்ள 12525 ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்த உத்தரவு

ஊரக வளர்ச்சித்துற

ஆணையர் தாரேஸ் அகமது சுற்றறிக்கை.

🍀🍀🍀🍀🍀🍀

    👉துபாயில் ரூ.1347 கோடிக்கு விலை உயர்ந்த பங்களாவை வாங்கிய முகேஷ் அம்பானி


 🍀🍀🍀🍀🍀🍀   

👉தமிழ்நாடு முழுவதும் 6,563 பட்டாசு கடைகளுக்கு தீயணைப்பு துறை அனுமதி


தீயணைப்பு துறை டிஜிபி பி.கே.ரவி தகவல்

சென்னையில் மட்டும் 861 பட்டாசு கடைகளுக்கு அனுமதி.

🍀🍀🍀🍀🍀🍀

    🌹தெலங்கானா ஆளுநராக 4வது ஆண்டு பணியினை தொடங்கியுள்ள தமிழிசை செளந்தரராஜன்

 சென்னை, கிண்டியில் தமிழிசை செளந்தரராஜனின்

 3ஆம் ஆண்டின் பயணம் குறித்து புத்தகம் வெளியீடு

🍀🍀🍀🍀🍀🍀

    👉இந்தியில் மருத்துவப் படிப்பு" மத்தியப் பிரதேசத்தை பின்தொடரும் உத்தரப் பிரதேசம்.. யோகி அறிவிப்பு

🍀🍀🍀🍀🍀🍀

    👮குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுடன்  பயணிப்பவர்கள் மீதும் வழக்கு பதிவு மற்றும் அபராதம்!


புதிய போக்குவரத்து விதியை நேற்று நள்ளிரவு முதல் அமல் படுத்தியது சென்னை போக்குவரத்து காவல் துறை.

🍀🍀🍀🍀🍀🍀

    👉அதிமுக ஆட்சியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் முறைகேடு!


2012 - 2016 ஆம் ஆண்டு வரை அண்ணா பல்கலைக்கழகத்தில் ரூ.11 கோடி ஊழல் நடந்திருப்பது அம்பலம்!

வேலையே செய்யாத நிறுவனத்திற்கு பணப்பட்டுவாடா செய்ததாகவும் சி.ஏ.ஜி அறிக்கையில் தகவல்

🍀🍀🍀🍀🍀🍀

    👉கட்டிடங்கள், வீடுகளில் உள்ள கழிவுநீர் தொட்டி, கழிவுநீர் பாதையில் இறங்கி சுத்தம் செய்ய தனி நபரை நியமித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் 


- சென்னை மாநகராட்சி எச்சரிக்கை

🍀🍀🍀🍀🍀🍀

    😭விருதுநகர் அருகே முதலிப்பட்டி பகுதியில் கிணற்றில் குளிக்க சென்ற ஸ்ரீனிவாசன் முனியசாமி ஆகிய இருவர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு.

🍀🍀🍀🍀🍀🍀

    👉நேர்மை தவறிய ஒரு மூத்த ஊழியரை 10 நிமிடங்களில் டிஸ்மிஸ் செய்தோம் - விப்ரோ சேர்மன் பிரேம்ஜி

🍀🍀🍀🍀🍀🍀

        👉 பட்டாசு வெடிக்க நேர நிர்ணயம். ஆனால் டாஸ்மாக்கிற்கு முழு நேர அனுமதி வழங்கியிருப்பது வெட்ககேடானது”


- அன்புமணி ராமதாஸ், பாமக தலைவர்

🍀🍀🍀🍀🍀🍀

செய்தியாளர் பாஸ்கர்