ஒரு வரிச் செய்திகள்

 


    👉புதுக்கோட்டை அரசு ஒப்பந்ததாரர் பாண்டித்துரைக்கு தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத ரூ.1.8 கோடி பறிமுதல்

கடந்த சில ஆண்டுகளாக ரூ.60 கோடி வருவாய் ஏய்ப்பு செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டதாக வருமானவரித்துறை

🍀🍀🍀🍀🍀🍀

    👉திமுக எம்பி ஆ.ராசாவை கண்டித்து கோவை விமான நிலையத்திலிருந்து காளப்பட்டி செல்லும் சாலையில் பாஜக மகளிர் அணி சார்பில் கருப்புக்கொடி போராட்டம்; 50 பேர் கைது

 🍀🍀🍀🍀🍀🍀

    👉திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்தசஷ்டி திருவிழா


"விழாவில் மாலை அணிந்து வரும் பக்தர்கள் கோயிலில் தங்க அனுமதி இல்லை"

மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் அறிவிப்பு

🍀🍀🍀🍀🍀🍀

    💐💐இலங்கையுடனான இறுதிப் போட்டியில் 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது இந்தியா!


மகளிர் ஆசிய கோப்பையை 7 வது முறையாக வென்றது இந்திய அணி.

🍀🍀🍀🍀🍀🍀

👉இந்தி திணிப்பு என்பது பொய்;

எதை வைத்து இந்தி திணிப்பு என்று போராட்டம் நடத்துகிறார்கள் அதற்கான ஆதாரம் உள்ளதா? முதலமைச்சர் விளக்கம் கொடுக்க வேண்டும்


திமுகவின் கபட நாடகம் இந்தி எதிர்ப்பு"

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

🍀🍀🍀🍀🍀🍀

    👉மக்களின் வாழ்வை எளிதாக்க, கடந்த 8 ஆண்டுகளில் 32,000 பழைய சட்டங்களை நீக்கியுள்ளோம் 

பிற்போக்குத்தனமான காலனியாதிக்க சட்டங்களை நீக்குவதால், சமூகம் முன்னேற்றம் காணும் - பிரதமர் மோடி

🍀🍀🍀🍀🍀🍀

    👊நேட்டோ படைகள் ரஷ்யாவுடன் மோதினால் சர்வதேச பேரழிவு ஏற்படும்!


தவறான முடிவை யாரும் எடுக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கை உள்ளது - ரஷ்ய அதிபர் புதின் பேச்சு

🍀🍀🍀🍀🍀🍀

    👮திண்டுக்கல் அருகே குட்கா பதுக்கி வைத்திருந்த 2 பேர் கைது, 460 கிலோ குட்கா, சொகுசு கார், ஆட்டோ பறிமுதல் போலீசார் நடவடிக்கை.

🍀🍀🍀🍀🍀🍀

    👪வாடகைத்தாய் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி. விசாரணைக்குழுவிடம் ஆதாரங்களை சமர்பித்த விக்னேஷ்சிவன்–நயன்தாரா தம்பதி. 6 ஆண்டுகளுக்கு முன்பே பதிவு திருமணம் செய்ததிற்கும், கடந்த டிசம்பர் மாதமே வாடகைத்தாய் முறையில் ஒப்பந்தம் பதிவு செய்ததற்கான ஆதாரங்கள் சமர்பிப்பு

🍀🍀🍀🍀🍀🍀

👉உலகின் அபாயகரமான நாடுகளில் பாகிஸ்தானும் ஒன்று - ஜோ பைடன்

🍀🍀🍀🍀🍀🍀

 🌺சைதாப்பேட்டையில் முடியும்நிலையில் மழைநீர் வடிகால் பணி - அமைச்சர் மா. சுப்பிரமணியன்


🍀🍀🍀🍀🍀🍀