ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பு

 


    ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பு !


ரயில்வே ஊழியர்களுக்கு 78நாட்கள் ஊதியம் தீபாவளி போனசாக வழங்கப்படும் - மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்

🙈🐵🐵🐵🐵🙈

 💢சில செய்தி துளிகள்💢

    

👉இந்துக்கள் தொடர்பான விசிக  தலைவர் திருமாவளவனின் கருத்துக்கு மிரட்டும் வகையில் பதில் அளித்த விவகாரம்:

பாஜக மதுரை மாவட்ட தலைவர் சுசீந்திரனை வழக்கு நிலுவையில் இருக்கும் வரை கைது செய்ய வேண்டாம் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அறிவுறுத்தல்

🙈🐵🐵🐵🐵🙈

    👉தமிழகத்தில் வரும் 28ஆம் தேதி முதல் 

தொடர் பால் நிறுத்த போராட்டம் 

தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நல சங்கம் அறிவிப்பு

ஒரு லிட்டர் பசும்பால் ₨42க்கும், எருமை பால் ₨51க்கும் கொள்முதல் விலையை உயர்த்த கோரிக்கை

🙈🐵🐵🐵🐵🙈

    👉பண மதிப்பிழப்பு நடவடிக்கை முடிவு எடுக்கப்பட்டது தொடர்பாக ரிசர்வ் வங்கி மற்றும் மத்திய அரசு விரிவான பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றத்தின் ஐந்து பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு உத்தரவு

🙈🐵🐵🐵🐵🙈

    👉அம்பத்தூர் மாணவன் தற்கொலை விவகாரத்தில் திடீர் திருப்பம் - ஆசிரியை போக்சோவில் கைது

🙈🐵🐵🐵🐵🙈

    👉தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் தமிழ் மொழி கட்டாயம் என்பது அரசின் நிலைப்பாடு;

தமிழ் நமது அடையாளம். தமிழகத்தில் எந்த மொழியையும் திணிக்க முடியாது”

- கோவையில் திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி பேட்டி

🙈🐵🐵🐵🐵🙈

        👉22% வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்வது தொடர்பாக மத்திய அரசிடம் வலியுறுத்த உணவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வரும் 19 டெல்லி செல்கிறார் - அமைச்சர் சக்கரபாணி

🙈🐵🐵🐵🐵🙈

     👉தொழில் முனைவோர்கள், அருகில் உள்ள கல்லூரிகளுடன் நல்ல தொடர்பில் இருங்கள். இதற்கு கல்லூரிகளும் ஒத்துழைக்க வேண்டும்;

படிக்கும்போதே தொழிற்சாலைகளுக்கு போய் பயிற்சி பெறும் உணர்வை மாணவர்களிடம் நீங்கள் தான் உருவாக்க வேண்டும்"

- அமைச்சர் பொன்முடி

🙈🐵🐵🐵🐵🙈

    👉சென்னை, உயர்நீதிமன்ற வளாகத்தில் சாதி சான்றிதழ் கிடைக்காத விரக்தியில் இளைஞர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம்

கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த இளைஞர் வேல்முருகன் உயிரிழப்பு

🙈🐵🐵🐵🐵🙈


செய்தியாளர் பாஸ்கரன்