👮மின்னல் ரவுடி வேட்டை"
நாகப்பட்டினம் மாவட்டத்தில் நடைபெற்ற ஆபரேஷன் மின்னல் ரவுடி வேட்டையில் 38 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது - மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜவஹர் தகவல்
🐙🐙🐙🐙🐙
👉நயன்தாராவிடம் விசாரணை?
"21-36 வயதுடையவர்களே சினைமுட்டை தானம் செய்யவேண்டும்.திருமணம் ஆகி,கணவரின் ஒப்புதல் இருக்கவேண்டும்;
விதிமுறையை பின்பற்றி வாடகைத்தாய் மூலம் நயன்தாரா குழந்தை பெற்றாரா
வாடகைத்தாய் மூலம் குழந்தைகளை பெற்றெடுத்த நயன்தாரா, விக்னேஷ் சிவனிடம் விளக்கம் கேட்கப்படும்
-அமைச்சர் மா.சுப்பிரமணியன்
🐙🐙🐙🐙🐙
👉இல்லம் தேடிக் கல்வித் திட்ட தன்னார்வலர்களின் செயல்பாடுகள் பிரமிப்பை ஏற்படுத்துவதால், அவர்களே LKG, UKG வகுப்புகளுக்கு பாடம் எடுக்க பொருத்தமானவர்களாக இருப்பார்கள்"- அமைச்சர் அன்பில் மகேஸ்
பள்ளி வளாகங்களில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் செயல்பாடுகளுக்கு எங்கும் அனுமதி கிடையாது
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் திட்டவட்டம்
🐙🐙🐙🐙🐙
👉ஆபிஸர்ஸ் கிளப்" மூடல்!
திருச்சி: வ.உ.சி சாலையில் இயங்கி வந்த வருவாய் துறைக்கு சொந்தமான "ஆபிஸர்ஸ் கிளப்" தனியார் சங்கத்திற்கு குத்தகைக்கு விடப்பட்ட நிலையில், பல ஆண்டுகளாக குத்தகை தொகை செலுத்தாததால் அவர்களின் குத்தகை உரிமத்தை ரத்து செய்து கிளப்பை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவு
🐙🐙🐙🐙🐙
👉தேசிய கீதத்தில் வரும் திராவிடம் என்பது தமிழ்நாடு தெலுங்கானா, கர்நாடகா, ஆந்திரா,கேரளா ஆகிய மாநிலங்களை உள்ளடக்கியது தான்;
ஆனால் தற்போது திராவிடம் என்றால் தமிழ் என கூறப்பட்டு வருகிறது"
-ஆளுநர் ஆர்.என்.ரவி
🐙🐙🐙🐙🐙
👉தற்கொலை முயற்சிக்காக பயன்படுத்தப்படும் சானிபவுடர் விற்பனை விரைவில் தமிழ்நாடில் தடை!
கடைகளில் எலி மருந்து தனியாக கொடுக்க கூடாது, வெளியே தெரியும் படி விற்பனை செய்ய கூடாது - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
🐙🐙🐙🐙🐙
👉அரியலூர்: சிலம்பூர் கிராமத்தில் நிறைமாத கர்ப்பிணியான நிர்மலாவை வரதட்சனை கேட்டடு எரித்து கொன்ற விவகாரம்:
கொலைக்கு உடந்தையாக இருந்த மேலும் சிலரை கைது செய்து, தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தி அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
🐙🐙🐙🐙🐙
👉கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் இதுவரை நடத்திய விசாரணைக்கான ஆவணங்கள் சமர்ப்பிப்பு
உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் அறிக்கையை தாக்கல் செய்தது தனிப்படை போலீஸ்
1500 பக்கங்கள் கொண்ட ஆவணங்களை மூடி முத்திரையிடப்பட்ட கவரில் சமர்ப்பித்தனர்
🐙🐙🐙🐙🐙
👉காஞ்சிபுரம்: பல்வேறு எதிர்ப்புகளை மீறி பரந்தூர் விமான நிலையம் அமைப்பதில் தமிழ்நாடு அரசு உறுதி;
முதற்கட்டமாக இடத்தேர்வுக்கான அனுமதி கோரி TIDCO மூலம் அரசு விண்ணப்பித்திருப்பதாக மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் தகவல்
🐙🐙🐙🐙🐙
👉கடலூர் அருகே சிறுப்பாக்கம் பகுதியில் மின்சாரம் தாக்கி 2 பேர் உயிரிழப்பு
வீட்டில் துணி காய வைக்கும்போது இரும்பு கம்பிகளில் மின்சாரம் பாய்ந்து தந்தை, மகன் உயிரிழப்பு
🐙🐙🐙🐙🐙
👉சாயம் போகாத கட்சி திமுக என்பதை ஜெயக்குமார் தெரிந்து கொள்ள வேண்டும்;
ஓராண்டில் எவ்வளவு கோடி ஒதுக்கி எத்தனை திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம் என்பதை அவர்கள் ஆராய்ந்து பார்க்க வேண்டும்"
- அமைச்சர் கே.என்.நேரு
🐙🐙🐙🐙🐙
👮இந்து சமயம், கடவுள் மீது சுய லாபத்திற்காக அரசியல் பேசுபவர்களின் நாக்கை வெட்டப்படும் என சர்ச்சையாக பேசிய விவகாரம்
மதுரை மாவட்டம் பாஜக செயலாளர் சுசீந்திரன் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
🐙🐙🐙🐙🐙
👉சென்னையில் இயங்கும் புறநகர் ரயில்களில் ஏசி பெட்டிகளை அறிமுகப்படுத்த முடிவு.
புறநகர் ரயில்கள் மெட்ரோ ரயில் நிறுவனத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்ட நிலையில் புதிய முடிவு.
🐙🐙🐙🐙🐙
செய்தியாளர் பானு