ராகுல் காந்தியிடம் தேசிய கொடியை வழங்கி யாத்திரையை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்

 


    கன்னியாகுமரியில் நடைபெற்று வரும் இந்திய ஒற்றுமை பயண தொடக்க விழாவில் ராகுல் காந்தி பேச்சு: 


அழகான தமிழ்நாட்டுக்கு வருவது எப்போதும் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.


3 சமுத்திரமும் சங்கமிக்கும் இந்த இடத்தில் தேச ஒற்றுமைக்கான பயணத்தை தொடங்குவதில் மகிழ்ச்சி.

சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்கு பின்னரும் இந்தப் பயணம் ஏன் என்ற கேள்வி எழுகிறது.    நாட்டை ஒற்றுமைப்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர்- ராகுல் காந்தி.

தேசியக் கொடியை பார்க்கும் போது அதன் மாட்சிமை, மகத்துத்துவக்காக அதை வணங்கி வாழ்த்த வேண்டும்.


மூவர்ணக் கொடி யாரோ சிலருக்கு மட்டும் சொந்தமானதல்ல; நாட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் சொந்தமானது.

நமது தேசியக்கொடி இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநில மக்களின் உணர்வுகளையும் பிரபலிக்கிறது.    பாஜக ஆட்சியில் சிறுகுறு தொழில்கள் முடக்கப்பட்டுள்ளன. விவசாயிகள் வாழ முடியாத சூழல் நிலவி வருகிறது.

பேரழிவை நோக்கி இந்தியா சென்று கொண்டிருக்கிறது.

பெரு முதலாளிகள் இல்லாமல் பாஜகவால் இருக்க முடியாது. பெரு முதலாளிகளுக்கான திட்டங்களையே பிரதமர் கொண்டு வருகிறார்.    ஆங்கிலேயர்களை போல் ஆட்சி நடத்திவருகிறார் பிரதமர்.

மதம், மொழியின் மூலம் இந்தியாவை பிளக்க பாஜக முயற்சி. இந்தியாவை யாராலும் பிளவுபடுத்த முடியாது.

பாஜக மிரட்டலுக்கு ஒருபோதும் எதிர்க்கட்சிகள் அடிபணியாது.

வீடியோ


    சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை ஆகியவற்றை வைத்து எங்களை மிரட்டலாம் என நினைக்கிறார்கள்; ஒரு நாளும் பயப்பட மாட்டோம்.

இங்கே வருகை தந்து எனது நடை பயணத்தை வாழ்த்தி, தொடங்கி வைத்த அன்புச் சகோதரர் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நெஞ்சார்ந்த நன்றி - ராகுல் காந்தி


சமத்துவத்தின் சின்னமான வள்ளுவர் சிலை உயர்ந்து நிற்கும் குமரி முனையைக் காட்டிலும் இந்த இந்திய ஒற்றுமைப் பயணத்தைத் தொடங்கப் பொருத்தமான இடம் வேறு இருக்கமுடியாது"

- ராகுல் காந்திக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து💐


செய்தியாளர் கார்த்திக்