டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை

 


    👉பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள். டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை


    👉தொடர் பெட்ரோல் குண்டு வீச்சு எதிரொலி: கோவை விரைகிறார் டிஜிபி சைலேந்திர பாபு

என்.ஐ.ஏ. சோதனைக்கு பிறகு கோவை, மதுரை உள்ளிட்ட இடங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடந்தவண்ணம் உள்ளன

🌴🌴🌴🌴🌴    👉தமிழ்நாட்டில் தொடரும் பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவங்கள் அதிர்ச்சியளிக்கின்றன;

தமிழ்நாட்டை வெடிகுண்டு கலாச்சாரத்துக்கு மாற்ற முயல்வோரை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும்.சட்டம்-ஒழுங்கையும் அமைதியையும் பாதுகாக்க வேண்டும்

- மநீம தலைவர் கமல்ஹாசன்

🌴🌴🌴🌴🌴

    🙏சென்னை அரசு மருத்துவமனை சிகிச்சை பெற்று வரும் நடிகர் போண்டாமணிக்கு சிகிச்சைக்காக ரூ 1 இலட்சம் வழங்கினார் இளைய சூப்பர் ஸ்டார் தனுஷ்.

🌴🌴🌴🌴🌴

    👉பள்ளிக் கல்வித்துறையில் 3 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்தில் பணியாற்றிய பொதுப்பணி மற்றும் அமைச்சுப்பணி உள்ளிட்ட அனைத்து பணியாளர்களுக்கு இடமாறுதல், செப்.27 முதல் செப்.30 வரை நடத்த வேண்டும்

- பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

🌴🌴🌴🌴🌴

    👉சண்டிகர் பல்கலைக்கழத்தில் மாணவிகள் விடுதியில் கேமரா வைத்து வீடியோ எடுத்த விவகாரம் - அருணாச்சல பிரதேசத்தில் பணியில் உள்ள பாதுகாப்பு படையைச் சேர்ந்த வீரர் 4வது நபராக கைது

🌴🌴🌴🌴🌴

    👉தம்பதிக்கு வழங்கப்பட்ட மரண தண்டனை ரத்து

தாய், தந்தை, சகோதரனை எரித்து கொன்றதாக மகன் மற்றும் மருமகளுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ரத்து 

பூந்தமல்லி சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம்

🌴🌴🌴🌴🌴

    👉பிரதமரைக் கொல்ல ’பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா’ சதி - அமலாக்கத்துறை அதிர்ச்சி தகவல்

🌴🌴🌴🌴🌴


செய்தியாளர் கார்த்திக்