இருவரிச் செய்திகள்    💐மிஸ் தமிழ்நாடு பட்டம் வென்று அசத்திய செங்கல்பட்டை சேர்ந்த கட்டிடத் தொழிலாளியின் மகள் ரக்சயா!

🐤🐤🐤🐤🐤🐤

    👊சிறுமி பாலியல் வன்கொடுமை - காவல் ஆய்வாளர், உணவு பொருள் வழங்கல் துறை அதிகாரி, பாஜக பிரமுகர் உள்பட 13 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை -சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு.!


வண்ணாரப்பேட்டையில் 15 வயது சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வன்கொடுமை செய்த வழக்கில் சிறுமியின் உறவினர்கள் 6 பெண்கள் உள்பட 8 பேருக்கு ஆயுள் தண்டனை!

🐤🐤🐤🐤🐤🐤

    👊நெல்லை: களக்காடு அருகே நெடுவிளை பகுதியில் குடும்ப முன்விரோதம் காரணமாக மாமனார் வெட்டிக்கொன்ற மருமகன் கிருஷ்ணனுக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பு

🐤🐤🐤🐤🐤🐤

    👉கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கு - விசாரணைக்கு பெற்றோர் ஒத்துழைப்பதில்லை, மரபணு சோதனைக்கு மாதிரிகளை தர மறுக்கிறார்கள் என சிபிசிஐடி தரப்பில் உயர் நீதிமன்றத்தில் புகார்

மாணவி பயன்படுத்திய மொபைல்போனை சிபிசிஐடி வசம் ஒப்படைக்க பெற்றோருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

🐤🐤🐤🐤🐤🐤

      👉Free Fire விளையாட்டில் ரத்தம் தெறிப்பது போன்ற காட்சிகள் குழந்தைகளிடம் வன்முறையை தூண்டுவதாக அமைந்துள்ளது;

ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்தாலும் மீண்டும் வெவ்வேறு பெயர்களில் வந்து கொண்டே தான் இருக்கிறது

-உயர்நீதிமன்ற மதுரைக்கிளை      

🐤🐤🐤🐤🐤🐤

    👉அதிமுகவில் இருந்து பண்ருட்டி ராமச்சந்திரன் நீக்கம் - அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி  அறிவிப்பு


    👉பிளாஸ்டிக் குவியலைப் பார்த்தால் எனக்கு கடுமையாக கோபம் வருகிறது;

பிளாஸ்டிக்கை யாரும் பயன்படுத்த வேண்டாம், அதில் இருந்து விலகி இருக்க வேண்டும். நாம் பிளாஸ்டிக்குக்கு எதிரி. நமக்கு பிளாஸ்டிக் எதிரி

- அமைச்சர் மெய்யநாதன்

🐤🐤🐤🐤🐤🐤

    👉எந்த மாநிலமாக இருந்தாலும் அங்கு பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடைபெற கூடாது. இது பொது மக்களுக்கு அச்சத்தை அளிக்கிறது;

ஒரு மாநிலத்தில் சமய சார்பற்ற உணர்வு இருக்க வேண்டும்

- புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்

🐤🐤🐤🐤🐤🐤

    👉தமிழ்நாடு மு.க.ஸ்டாலினால் அருமையாக வழிநடத்தப்படுகிறது. அதை சீகுலைக்க பார்க்கிறார்கள்;

தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் காலுன்ற நினைக்கிறார்கள். அது நடக்காது

- மதிமுக பொதுச்செயலாளர் வைகோ

🐤🐤🐤🐤🐤🐤

  


   🌷🌷இன்று (26.09.2022) செவ்வாய்க்கிழமை தமிழர் தந்தை ஐயா சி பா ஆதித்தனார் அவர்களின் 118 வது பிறந்த நாளை முன்னிட்டு இந்திய நாடார்கள் பேரமைப்பின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது..


🐤🐤🐤🐤🐤🐤    🌹கைலாசா சார்பில், ஐ.நா. சபையின் தூதுவராக விஜயபிரியா நித்தியானந்தா என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார் - நித்யானந்தா


செய்தியாளர் பாஸ்கர்