🌷🌷தினத்தந்தி அதிபர் திரு பா.சிவந்தி ஆதித்தன் பிறந்தநாள் தலைவர்கள் வாழ்த்து💐💐

 


    🌷🌷 (24-09-22) அன்று தினத்தந்தி அதிபர் திரு பா.சிவந்தி ஆதித்தன் அவர்களின் 87வது பிறந்தநாளை முன்னிட்டு  தமிழக அமைச்சர்கள் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே சேகர்பாபு, அமைச்சர் மா. சுப்பிரமணியன் அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் வியாபாரிகள் சங்க தலைவர்கள் அவரது இல்லத்தில் மலர்களை செலுத்தி மரியாதை செலுத்தினார்கள்.💐🙏தென்காசியில் இந்திய நாடார்கள் பேரமைப்பின் நிறுவன தலைவர் ராகம் சௌந்தரபாண்டியன் நாடார் அவர்களின் வழிகாட்டுதல்படி மாநில துணை தலைவர் அகரக்கட்டு லூர்து  நாடார் அவர்கள் தலைமையில் தென்காசியில் பத்ம ஸ்ரீ டாக்டர் பா.  சிவந்தி ஆதித்தனார் அவர்களின் 87வது  பிறந்த நாளை முன்னிட்டு தென்காசி  காசி விசுவநாதர் திருக்கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது இதனை தொடர்ந்து அங்கு வருகை தந்த பக்தர்களுக்கு இந்திய நாடார்கள் பேரமைப்பு சார்பில் லட்டு  வழங்கப்பட்டது🙏பத்ம ஸ்ரீ டாக்டர் பா.  சிவந்தி ஆதித்தனார் அவர்களின் 87வது  பிறந்த நாளை தமிழகத்தில் உள்ள அனைத்து நாடார் சங்கத்தை சேர்ந்தவர்களும் அவர்களுடைய உருவப்படத்திற்கு மலர் செலுத்தி இனிப்பு வழங்கி அவருடைய பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடினர்.🌹🌹அய்யா பத்மஶ்ரீ பா.சிவந்தி ஆதித்தனாரின் 87 வது பிறந்த தினத்தில் போயஸ்கார்டனில் அவருடைய உருவ படத்திற்கு இந்திய நாடார்கள் பேரமைப்பு சார்பில் மலர் தூவி மரியாதை செலுத்தினர். 💐💐


ஞான பிரகாஷ்