இரு வரி செய்திகள்

 


        👉நடிகர் பிரசாந்த் மீது சுவிச்சர்லாந்து விமான நிலைய பெண் ஊழியர் பண மோசடி புகார்


நடிகர் பிரசாந்த் ₨10 லட்சம் பண மோசடி செய்திருப்பதாக கூறி பாண்டி பஜார் காவல் நிலையத்தில் இலங்கையைச் சேர்ந்த குமுதினி என்ற பெண் புகார்

🌴🌴🌴🌴🌴

    👉ஒவ்வொரு மாவட்டத்திலும் 10 மாதிரி நியாய விலைக் கடைகள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


மாநிலம் முழுவதும் அனைத்து நியாய விலை கடைகளிலும் படிப்படியாக google pay, paytm போன்ற UPI மூலம் பணம் பரிமாற்றம் செய்வதற்கான வசதி மேற்கொள்ளப்பட உள்ளது-

🌴🌴🌴🌴🌴

    👉போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்தாக அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய வழக்கில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்

🌴🌴🌴🌴🌴

    👉முதல்வர் ஸ்டாலின் இன்று கேரளா பயணம்


தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்க இன்று கேரளா செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 


மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் நாளை நடைபெறும் கூட்டத்தில் தென் மாநிலங்களின் முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதம்

🌴🌴🌴🌴🌴

     👉எத்தனையோ சோதனைகளை சந்தித்து அதிமுக என்றால் இபிஎஸ் தான் என்பதை தீர்ப்பின் மூலம் காட்டியுள்ளார்கள்;


அதிமுக கொடி, 1.5 கோடி தொண்டர்கள் இனி இபிஎஸ்-க்கு தான் சொந்தம். இனி யாரும் கூக்குரல் இட முடியாது”

- பொள்ளாச்சி ஜெயராமன்

🌴🌴🌴🌴🌴

    👉சமஸ்கிருதத்தை தேசிய மொழியாக அறிவிக்க கோரி தொடரப்பட்ட மனு: விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு


உங்கள் விளம்பரங்களுக்காக நாங்கள் வழக்கை விசாரிக்க முடியாது என நீதிபதிகள் காட்டம்

🌴🌴🌴🌴🌴

     👉அதிமுக இடைக்கால பொது செயலாளர் மற்றும் ஒற்றை தலைமை இபிஎஸ் என்பதை சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு உறுதிப்படுத்தியது மகிழ்ச்சி;


ஓபிஎஸ் தரப்பினரின் அரசியல் எதிர்காலம் இனி பூஜ்ஜியம்”

- முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

🌴🌴🌴🌴🌴

    👉இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது குறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி தொடரப்பட்ட மனு வழக்கினை விசாரணைக்கு ஏற்றது உச்சநீதிமன்றம்


வழக்கு அடுத்த வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என உச்சநீதிமன்றம் அறிவிப்பு

🌴🌴🌴🌴🌴

    👉அரசு பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்பில் தொழிற்கல்வி பாடப்பிரிவுகளை மூட கல்வித்துறை உத்தரவு


தொழிற்கல்வி பிரிவுகளில் மாணவர் சேர்க்கையை ரத்து செய்யவும் உத்தரவு - ஆசிரியர்கள், மாணவர்கள் அதிர்ச்சி

🌴🌴🌴🌴🌴


24 லட்சம் வாட்ஸ் அப் கணக்குகள் நீக்கம்


புதிய தகவல் தொழில்நுட்ப கொள்கை விதிகளை மீறியதாக கடந்த ஜூலையில் மட்டும் சுமார் 24 லட்சம் இந்தியர்களின் கணக்குகளை நீக்கியுள்ளது வாட்ஸ் அப் 

மார்ச் மாதத்தில் நீக்கப்பட்ட கணக்குகள் 18 லட்சமாக இருந்தது

🌴🌴🌴🌴🌴

செய்தியாளர் பாஸ்கர்