மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் புதுமை பெண் திட்டத்தை தொடங்கிவைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

     மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் புதுமை பெண் திட்டத்தை தொடங்கிவைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.


    புதுமைப்பெண் திட்ட துவக்க விழாவில் டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் உரை.



    புதுமைப் பெண் திட்டம் உள்பட கல்வித்துறையில் பல புதிய முன்னெடுப்புகளை எடுத்துவரும் ஸ்டாலினுக்கு வாழ்த்துகள்;

இந்தியாவுக்கே வழிகாட்டும் புரட்சிகரமான திட்டம் தான் புதுமைப் பெண் திட்டம்.

ஒரு மாநில முதலமைச்சர், இன்னொரு மாநிலத்திற்கு சென்று பள்ளிகள், மருத்துவமனைகளை பார்வையிடுவதை இதுவரை யாரும் கண்டதில்லை.

ஆனால் தமிழ்நாட்டில் இருந்து டெல்லிக்கு வந்து பார்வையிட்டு, அதேபோல் தமிழ்நாட்டிலும் அமைப்பேன் என்று சொல்லி, அதை இப்போது அமைத்தும் காட்டியிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.



    திறமை இருந்தும், வறுமை காரணமாக மாணவியர் படிப்பைக் கைவிடும் சூழல் உள்ளது.


ஆனால் புதுமைப்பெண் திட்டம் இந்த இடைநிற்றலை தவிர்க்கும் புரட்சிகரமான திட்டம். இந்தியா முழுவதும் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.

டெல்லி, தமிழ்நாடு உள்பட சில மாநிலங்கள் தவிர நாடு முழுவதும் பெரும்பாலான அரசுப்பள்ளிகளின் நிலை கவலைக்குரியதாக உள்ளது டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்.



    அரசுப்பள்ளிகளை மேம்படுத்தா விட்டால், தேசத்தின் வளர்ச்சி கேள்விக்குறியே.

மத்திய, மாநில அரசுகள் ஒன்றிணைந்தால் அடுத்த 5 ஆண்டுகளில் அரசுப் பள்ளிகளை மேம்படுத்த முடியும்-டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால்.


புதுமைப் பெண் திட்டத்தால் தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சி அதிகரிக்கும், பாலின சமத்துவம் ஏற்படும், குழந்தை திருமணங்கள் குறையும். பெண்கள் அடங்கிபோகத் தேவையில்லை; முதல்வர் ஸ்டாலின்



    ரூ.1,000 இலவசமாக வழங்கப்படவில்லை. அது அரசின் கடமை- முதலமைச்சர் ஸ்டாலின்.

நன்றாக படிக்கும் பெண்கள், திருமணத்திற்கு பின் வீட்டிற்குள் முடங்கும் சூழல் உள்ளது. இது மாற வேண்டும்.

தந்தைக்குரிய கடமை உணர்வுடன் பேசுகிறேன். மாணவர்களை வளர்த்தெடுக்கவே நானும், அரசும் உள்ளோம்- முதலமைச்சர் ஸ்டாலின்.

சமூக நீதி என்பது சலுகை அல்ல, அரசின் கடமை; பெண் கல்வி ஊக்குவிக்கப்படும் போது, சமத்துவம் நிலைக்கும்.

பள்ளிக்கு ஒரு ஸ்மார்ட் வகுப்பறை உருவாக்க நடவடிக்கை; கற்றலோடு மாணவர்களின் பல்வேறு திறன்களையும் ஊக்குவிக்க நடவடிக்கை - முதல்வர்.


செய்தியாளர் பாஸ்கர்