💐சுதந்திர தினத்தன்று இரு விழா💐

 சுதந்திர தின விழா டாக்டர் ஜெயச்சந்திரனின் 75வது பிறந்த நாள் விழாவையொட்டி சென்னை ராயபுரம் செயின்ட் பீட்டர்ஸ் மேல்நிலைப் பள்ளியில் மருத்துவ முகாம் நடைபெற்றது இந்த மருத்துவ முகாமில் 75க்கும் மேற்பட்ட புகழ்பெற்ற மருத்துவ நிபுணர்கள் பங்கேற்று இலவச சிகிச்சை அளித்தனர் இம்முகாமில் இந்த முகாமில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று பயனடைந்தனர். 

வீடியோ:
இந்த விழாவில் ராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஐட்ரீம் மூர்த்தி, வடசென்னை இணை ஆணையர் ரம்யாபாரதி, ஐஏஎஸ் அதிகாரி ஆனந்தகுமார், காங்கிரஸ் பிரமுகர் எர்னஸ்ட் பால், தமிழக காங்கிரஸ் பொதுச் செயலாளர் கவிஞர் ராமலிங்கம் ஜோதி,  பாஜக பிரமுகர் வன்னிய ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்,.

இந்த நிகழ்ச்சியில் பேசிய சட்டமன்ற உறுப்பினர் ஐட்ரீம் மூர்த்தி , தன்னுடைய சமூக சேவைக்கு டாக்டர் ஜெயச்சந்திரன் முன்னோடி.அவரவர் வடசென்னைக்கான பிரச்னைகளில் முன்னெடுத்து பணியாற்றினார்.மெட்ரோ ரயிலுக்கான போராட்டத்தை அவரோடு நாங்கள் நடத்தினோம்.அதன் காரணமாக வடசென்னையில் மெட்ரோ ரயில் திட்டத்தை கலைஞர் கொண்டு வந்தார்  அவரால்தான்  நான் எம்எல்ஏவாக இருக்கிறேன் என்று குறிப்பிட்டார் 
சர்பரைஸ் விசிட்டடித்த   ஜெயக்குமார்

இந்த நிகழ்ச்சியில் மாஜி அமைச்சர் ஜெயகுமார் திடீரென விசிட் அடித்தார்.கம்யூனிஸ்ட் பிரமுகர் ராமச்சந்திரன், மீனவர் சங்கத்தலைவர் எம்டி தயாளன் தமிழக காங்கிரஸ் பொதுசெயலாளர் ராமலிங்கஜோதி  ஆகியோடு மேடையேறிய ஜெயகுமார், என்னை இந்த நிகழ்ச்சிக்கு அழைக்கவில்லை.சர்ப்ரைஸ் விசிட்டாக வந்திருக்கிறேன்.டாக்டர் ஜெயச்சந்திரன், 41 ஆண்டுகால  இனிய நண்பர், அவருடைய மருத்துவ சேவையால் வடசென்னையையே திரும்பி பார்க்க வைத்தவர் அந்த  சேவையில் அவருடைய  புதல்வர் சரத் ஜெயச்சந்திரனும் இணைந்திருப்பது   மகிழ்ச்சியளிக்கிறது தந்தையோடு தனயனும் மக்கள் சேவையில் இணைந்து இருக்கிறார் என்று பாராட்டினார்.


செய்தியாளர் ராஜ்குமார்