சென்னை ஜார்ஜ் கோட்டையில் தேசியக் கொடி ஏற்றினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

 


🙏சென்னை ஜார்ஜ் கோட்டையில் தேசியக் கொடி ஏற்றினார் முதலமைச்சர் ஸ்டாலின்.


2வது ஆண்டாக சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடி ஏற்றினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.


    “அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும்” - சுதந்திர தின விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்புஅரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கான அகவிலைப்படி 31%ல் இருந்து 34% ஆக உயர்வு!


"சுதந்திர போராட்ட தியாகிகளுக்கான சிறப்பு ஓய்வூதியம் ₹20,000-ஆக அதிகரிப்பு; தியாகிகளுக்கான குடும்ப ஓய்வூதியம் ₹10,000-ஆக உயர்த்தி வழங்கப்படும்;


“வீரபாண்டிய கட்டபொம்மன், மருது பாண்டிய சகோதரர்களின் வழித் தோன்றல்களுக்கு சிறப்பு ஓய்வூதியம் ₹10,000 ஆக உயர்வு!” 


“இந்திய விடுதலை போராட்டத்தில் தமிழ்நாட்டின் 260 ஆண்டுகால தொடர் பங்களிப்பை இளைஞர்கள் அறியும் வகையில், சென்னையில் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் விடுதலை நாள் அருங்காட்சியகம் அமைக்கப்படும்!”


“விடுதலை போராட்ட வீரர் மலையாள வெங்கிடுபதி எத்தலப்பருக்கு ₹2.6 கோடி மதிப்பில் திருப்பூரில் நினைவு மண்டபம் அமைக்கப்படும்!”

🌷சிறந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருது வழங்கி பாராட்டு


தமிழகத்தின் சிறந்த மாநகராட்சியாக சேலம் மாநகராட்சிக்கு விருது வழங்கப்பட்டுள்ளது


தமிழகத்தில் சிறந்த நகராட்சியாக ஸ்ரீவில்லிபுத்தூர், குடியாத்தம், தென்காசிக்கு விருது வழங்கப்பட்டது💐இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லக்கண்ணுவிற்கு தகைசால் தமிழர் விருது வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்


செய்தியாளர் மணிவண்ணன்