💐உயர்ந்த உள்ளம் 'நல்லக்கண்ணு'💐 மேலும் சில செய்தி துளிகள்

 


   💐உயர்ந்த உள்ளம் 'நல்லக்கண்ணு'💐


*பரிசுத் தொகை 10 லட்சத்துடன் கூடுதலாக 5000 சேர்த்து 10 லட்சத்து 5 ஆயிரமாக முதல்வர் நிதிக்கு நல்லக்கண்ணு வழங்கினார்*


🙏உயர்ந்த உள்ளம் 'நல்லக்கண்ணு'*


*பரிசுத் தொகை 10 லட்சத்துடன் கூடுதலாக 5000 சேர்த்து 10 லட்சத்து 5 ஆயிரமாக முதல்வர் நிதிக்கு நல்லக்கண்ணு வழங்கினார்*

🌴🌴🌴🌴🌴🌴

    👉அரும்பாக்கம் வங்கியில் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கு

மேலும் 3 பேரை தேடி கோவை விரைந்தது தனிப்படை போலீஸ்

கொள்ளையர்கள் கோவையில் பதுங்கி இருப்பதாக புதிய தகவல்

பாலாஜி, சந்தோஷ், முருகன் உள்ளிட்ட 3 பேர் ஏற்கெனவே கைது

🌴🌴🌴🌴🌴🌴

    👉முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி பயணம், நாளை குடியரசுத் தலைவர், பிரதமரை சந்திக்கிறார்.

🌴🌴🌴🌴🌴🌴

    👮அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் கார் மீது காலணி வீசிய விவகாரம்


பாஜக மகளிர் அணியை சேர்ந்த சரண்யா, தனலட்சுமி மற்றும் தெய்வானை என்ற 3 பெண்களை கைது செய்து தனிப்படை காவல்துறை விசாரணை

ஏற்கெனவே 7 பேர் கைதான நிலையில், மேலும் 3 பேர் கைது

🌴🌴🌴🌴🌴🌴

    👉வரும் செப்டம்பர் 12 -ம் தேதி முதல்முறையாக சென்னையில் தொடங்கப்படவுள்ள சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி;

நுங்கம்பாக்கத்தில் உள்ள டென்னிஸ் விளையாட்டு மைதானத்தில் விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் ஆய்வு


    👉அதிமுக ஆட்சியில் இருந்திருந்தால் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு ரூ. 500 கோடி செலவு செய்திருப்பார்கள்;

ஆனால் திமுக அரசு மிகவும் குறைத்து ரூ.114 கோடியில் போட்டியை நடத்தி காட்டியது”

- விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன்

🌴🌴🌴🌴🌴🌴

🌹தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டார் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி


பொறியியல் படிப்பிற்காக விண்ணப்பித்துள்ள 1.69 லட்சம் மாணவர்களின் பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது

🌴🌴🌴🌴🌴🌴

    🙏சென்னை மாதவரத்தில் ரூ.8 கோடி மதிப்பில் ஆவின் ஆய்வக கட்டடத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

🌴🌴🌴🌴🌴🌴

    👉நமது நாட்டில் மட்டுமே அனைத்து செயல்பாட்டிற்கும் பிரச்சனை ஏற்படுகிறது. இறந்த மனிதனை தகனம் செய்யவதில் கூட பிரச்சினையா?” 


சிவகாசி, கீழத்திருத்தங்கல் கிராமத்தில் உள்ள நீர்நிலை கண்மாயில் தகனமேடை அமைக்க தடை கோரிய வழக்கை தள்ளுபடி உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை உத்தரவு

🌴🌴🌴🌴🌴🌴

    👉ஆக.21ல் நீட் தேர்வு முடிவுகள்


நீட் தேர்வு முடிவுகள் ஆகஸ்ட் 21ம் தேதி வெளியீடு

🌴🌴🌴🌴🌴🌴

    👉சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் சிபிஐ தாக்கல் செய்த கூடுதல் குற்றப்பத்திரிகையில் அதிர்ச்சி தகவல்


தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸின் ரத்தக் கறை படிந்த கைலிகளை குப்பைத் தொட்டியில் காவல்துறை வீசியதாக குற்றப்பத்திரிகையில் தகவல்


🌴🌴🌴🌴🌴🌴


    👉கல்லூரி பேருந்து மோதி - பள்ளி மாணவன் பலி


நாமக்கல்: ராசிபுரம் அருகே கார்கூடல்பட்டியில் தனியார் கல்லூரி பேருந்து மோதியதில் 5ம் வகுப்பு மாணவன் பிரபாகரன் உயிரிழப்பு


செய்தியாளர் பாஸ்கர்