விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்

 


திண்டுக்கல் 108 விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் விநாயகர்.        விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு உலகப்புகழ் பெற்ற புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலில் உள்ள மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தங்க கவசம் சாத்தப்பட்டது.


🙏விநாயகர் சதுர்த்தி -  பிரதமர் வாழ்த்து


ஞானத்தையும், செல்வத்தையும் அளிக்கும் விநாயகரை அனைவரும் வணங்குவோம்


விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து


விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி புதுச்சேரியில் பிரசித்திபெற்ற மணக்குள விநாயகர் கோயிலில் தங்க கவசத்துடன் அலங்காரத்தில் விநாயகர் காட்சி தருகின்றார்.புதுச்சேரி மத்திய சிறையில் உள்ள தண்டனைக் கைதிகளால் செய்யப்பட்டு விற்பனைக்கு வைத்துள்ள விநாயகர் சிலைகளை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.

வீடியோ


விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திருச்சி மலைக்கோட்டை உச்சி பிள்ளையாருக்கும், மாணிக்க விநாயகருக்கும் 150 கிலோ கொழுக்கட்டை படைக்கப்பட்டது.விநாயகர் சதுர்த்தி திருநாளில் சென்னை கே.கே.நகர் அருள்மிகு ஸ்ரீசக்தி விநாயகர் திருக்கோவிலில் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் குடும்பத்துடன் தரிசனம் செய்தார்.


செய்தியாளர் பாஸ்கர்