🌹முத்துகுமாரால் பெய்யும் மழை🌻

       😊 முத்துகுமார் போன்ற நல்லவர்கள் இருப்பதால் மழை பெய்யென பெய்கிறது என்றார் காவல்துறை துணைக்கமிஷனர் சரவணன் . முத்துகுமார் அப்படியென்ன செய்து விட்டார். துணை ஆணையரே கூறினார்ர.திருநெல்வேலியில் நன்றாக மழை பெய்து கொண்டிருந்த போது அதில் நனைந்து கொண்டே வந்து என்னை பார்க்க வந்தார், 😊😃௭ன்ன விஷயம் என்ன என்ற போது ,நான் வண்ணாரப்பேட்டை எஸ்பிஐ ஏடிஎம் ல் பணம் எடுக்க சென்ற போது அவருக்கு முன்னால் சென்றிருந்த யாரோ ரூ 15000/-பணத்தை எடுக்காமல் சென்று விட்டதாகவும் அதனை உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் கூறி அந்த  பணத்தை என்னிடம் அளித்தார். உங்களிடம் கொடுத்தால் கட்டாயம் உரியவர்களிடம் ஒப்படைப்பீர் என்பதால் என்னிடம் வந்ததாக தெரிவித்தார் 😊.

ஒரு சிறு நிறுவனத்தில் மாத சம்பளக்கார்ராக பணியாற்றி வரும் முத்துக்குமாரின்  நேர்மையை பாராட்டினேன்.😃

ஜன்னலுக்கு வெளியே பெய்த மழை எனக்கென்னவோ முத்துக்குமாருக்காக பெய்தது போல தெரிந்தது.என்றார் துணைக்கமிஷனர் சரவணன்😊செய்தியாளர் மணிவண்ணன்