இருவரிச் செய்திகள்

 


    💥ஐந்தாண்டு சட்டப்படிப்பு சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவு இன்று முதல் வரும் 29ம் தேதி வரை நடைபெறுகிறது. 


tndalu.ac.in என்ற இணையதளம் மூலம் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் - தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகம் அறிவிப்பு.

🍀🍀🍀🍀🍀

    💥எதற்கெடுத்தாலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுகவை குறை சொல்வது இபிஎஸ்-க்கு வாடிக்கையான ஒன்று;


சட்டம்-ஒழுங்கு எங்கும் மீறப்படவில்லை, உடனடியாக 144 போடப்பட்டது

. திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேட்டி

🍀🍀🍀🍀🍀

    💥எந்த அடியாட்களையும் நாங்கள் அழைத்துவரவில்லை; முன் கூட்டியே திட்டமிட்டு எடப்பாடி ஆதரவாளர்கள் ஆட்களையும், ஆயுதங்களையும் குவித்து வைத்திருந்தனர் 


காலில் வெறும் பேண்டேஜ் போட்டுக்கொண்டு இ.பி.எஸ். ஆதரவாளர்கள் நாடகம் ஆடுகின்றனர் - ஓ.பி.எஸ். ஆதரவாளர் கோவை செல்வராஜ் பேட்டி

🍀🍀🍀🍀🍀

    💥அதிமுக தலைமை அலுவலகம் பூட்டி சீல் வைக்கப்பட்டதற்கான நோட்டீஸை எடப்பாடி பழனிசாமியிடம் மயிலாப்பூர் வட்டாச்சியர் நந்தினி வழங்கினார்

🍀🍀🍀🍀🍀

    💥புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினத்தை சேர்ந்த 6 மீனவர்கள் நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது

🍀🍀🍀🍀🍀

    💥சென்னை பள்ளிக்கரணை அருகே கட்டட பணியில் ஈடுபட்ட வடமாநில இளைஞர் அடித்துக்கொலை - 7 வடமாநில நபர்கள் கைது


மேற்கு வங்கத்தில் இவர்களுக்குள் இருந்த பிரச்னை, நேற்று ஒன்றாக மது அருந்தும்போது தகராறு ஏற்பட்டு கொலையில் முடிந்துள்ளது

🍀🍀🍀🍀🍀

    💐அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமிக்கு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தொலைபேசி வாயிலாக வாழ்த்து

🍀🍀🍀🍀🍀

    👉பண மதிப்பிழந்த ரூ.1600 கோடி நோட்டுக்களை பயன்படுத்தி சொத்துக்களை வாங்க சசிகலாவுக்கு பினாமிகளாக செயல்பட்டதாக கூறி வருமான வரித்துறை எடுத்த நடவடிக்கை செல்லும்: மேல்முறையீட்டு வழக்குகளை தள்ளுபடி செய்து சென்னை  உயர் நீதிமன்றம் உத்தரவு


🍀🍀🍀🍀🍀


செய்தியாளர் பாஸ்கர்