"தொழில் தொடங்க சிறந்த மாநிலம் தமிழ்நாடு" முதல்வர்

 


         சென்னை:, நுங்கம்பாக்கத்தில் தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்.

*முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் 60 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது 

*புதிய ஒப்பந்தங்களால் ₨1.25 லட்சம் கோடி முதலீடுகள் தமிழகத்திற்கு வர வாய்ப்பு…


   ”தொழில் தொடங்க சிறந்த மாநிலங்களில் 3வது இடத்தில் தமிழ்நாடு என்பது வரலாற்று சாதனை. முதலிடத்திற்கு வருவற்கான திட்டமிடலை தொடங்கி விட்டோம்;


தொழில்துறையை தங்கமாக மாற்றியவர் தங்கம் தென்னரசு”- முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்


திமுக அரசு பொறுப்பேற்ற பின் இதுவரை 192 புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.


இதன் மதிப்பு 2.20 லட்சம் கோடி ரூபாய் - முதலமைச்சர்


மேலும் சென்னையில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் 21 புதிய தொழில் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

22,252 கோடி மதிப்பில் 21 நிறுவனங்கள்  இதன் மூலம் 17,654 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.


செய்தியாளர் பாஸ்கர்