ஆடி மாதத்தின் முதல் செவ்வாய்..

 

    

    நாளை.. ஆடி மாதத்தின் முதல் செவ்வாய்..


 கஷ்டங்கள் விலக கந்தனை வழிபடுங்கள்..!!

               

குடும்பத்தில் ஒற்றுமையை நிலைக்க செய்யும் ஆடி செவ்வாய்..!!


💫 செவ்வாய்க்கிழமை என்பது நவகிரகங்களில் 'செவ்வாய்" கிரகத்தின் ஆதிக்கம் கொண்ட நாளாகும். மேலும், செவ்வாய்க்கிழமை முருகப்பெருமானை விரதமிருந்து வழிபடுவதற்கு ஏற்ற கிழமையாகும்.


💫 செவ்வாய்க் கிழமைகளில் துர்க்கை மற்றும் முருகப் பெருமானை வழிபடுவதால் தோஷம் நிவர்த்தியாகி திருமண பாக்கியமும், குழந்தை பாக்கியமும் கிடைக்கும்.


💫 அதிலும் ஆடி மாதத்தில் வரும் செவ்வாய்க்கிழமை மிகவும் சிறப்பு வாய்ந்தவை.

ஆடி மாத செவ்வாய்க்கிழமைகள் அனைத்துமே இறைவழிபாடு மற்றும் விரதங்களுக்கு ஏற்ற நன்னாளாகும்.


ஒளவையார் விரதம் :


💫 பெண்கள் ஆடி மாத செவ்வாய்க்கிழமையில் ஒளவையார் விரதம் இருப்பார்கள். இவ்விரதத்தின்போது இரவு 10.30 மணிக்கு மேல் அனைவரும் தூங்கிய பின் விரதம் இருக்கும் பெண்கள் ஒரு வீட்டில் ஒன்று கூடுவார்கள். மூத்த சுமங்கலிகள் வழிகாட்டுதலின்படி, இளம் பெண்கள் ஒளவையார் விரதத்தை தொடங்குவார்கள்.


💫 இவ்விரதத்தின் நிவேதனமாக பச்சரிசி மாவில் வெல்லம் சேர்த்து ஒருவித வடிவம் கொண்ட கொலுக்கட்டை தயாரிப்பார்கள். அன்றைய தினம் செய்யும் நிவேதனங்கள் எதிலும் உப்பு சேர்க்க மாட்டார்கள்.


💫 ஒளவையார் அம்மனை நினைத்து விளக்கேற்றி பூஜை செய்து வழிபாடு செய்வார்கள். அதன்பின் ஒளவையாரின் கதையை ஒருவர் சொல்ல அனைவரும் அதை கேட்பார்கள். இறுதியாக பெண்களே விரத நிவேதனங்கள் அனைத்தையும் உண்பார்கள். இவ்விரதத்தில் ஆண்களை கலந்து கொள்ள அனுமதிப்பதில்லை.


💫 குடும்பத்தில் ஒற்றுமை நிலைக்கவும், திருமணம் கைகூடவும், குழந்தை பாக்கியம் கிடைக்கவும், கணவன் நீண்ட ஆயுள் பெறவும் இந்த விரதத்தை கடைபிடிக்கின்றனர்.


ஆடி செவ்வாயின் விசேஷம் :


💫 பெண்கள் ஆடி செவ்வாய்க் கிழமைகளில் எண்ணெய் தேய்த்து, மஞ்சள் பூசி குளித்து, விரதம் இருந்து அம்மனை வழிபட்டால் மாங்கல்ய பாக்கியம் கூடும் என்று நம்புகின்றனர்.


💫 செவ்வாய்க் கிழமைகளில் அம்பாளை வழிபட்டு, மங்கள கௌரி விரதம் கடைபிடிப்பதாலும் விசேஷ பலன்கள் கைகூடும்.


💫 ஆடி செவ்வாய்க் கிழமைகளில் அன்னதானம் செய்தால், பிற நாட்களில் செய்வதைவிட அதிக பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை.


💫 ஜாதகத்தில் செவ்வாய் தோஷமும், அங்காரக தோஷமும், செவ்வாய் நீச்சமடைந்தவர்கள், செவ்வாய் திசை நடப்பவர்கள் செவ்வாய்க்கிழமை விரதம் இருக்க வேண்டும்.


💫 ஆடி செவ்வாய் விரதம் துர்க்கை, முருகனுக்குரிய விரதமாகும். செவ்வாய்க் கிழமைகளில் ராகு காலத்தில் துர்க்கையை பூஜிப்பது விசேஷமானது.


💫 பத்ரகாளி ராகுவாக அவதாரம் செய்தாள் என்பர். செவ்வாய் தோஷத்தாலும், நாகதோஷத்தாலும் திருமணம் தடைபட்டவர்கள், குழந்தைப் பாக்கியம் இல்லாதவர்கள் செவ்வாய்க் கிழமைகளில் ராகுகாலப் பூஜைகளில் பங்கு பெறுவது நல்லது.


💫 ஆடி செவ்வாய்க் கிழமைகளில் மட்டுமின்றி பொதுவாக செவ்வாய்க் கிழமைகளில் முருகப் பெருமானுக்கு விரதம் கடைபிடிப்பதும் நல்லது.


பக்தியுடன்

மோகனா  செல்வராஜ்