இருவரி செய்திகள்

 


     💐கஞ்சா வியாபாரிகள் மீது காவல்துறை எடுக்கும் நடவடிக்கைகள் பாராட்டுக்குரியவை - உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி புகழேந்தி.


கஞ்சா வியாபாரிகளின் சொத்துக்களை முடக்குவது போன்ற தென் மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் எடுத்த நடவடிக்கைகளுக்கு நீதிபதி பாராட்டு.

🐠🐠🐠🐠🐠

    💐தி அகாடமி” விருது தேர்வுக்குழுவில் இடம்பெற அழைப்பு பெற்றுள்ள நடிகர் திரு.சூர்யா அவர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு க ஸ்டாலின் அவர்கள் சமூக வலைதளங்கள் வாயிலாக வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி

🐠🐠🐠🐠🐠

    👉3 வயது குழந்தைகளுக்கு அரசு பேருந்தில் கட்டணம் வசூலிக்கப்படாதிருந்த நிலையில், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கட்டணம் இல்லை என அமைச்சர் சிவசங்கர் அறிவித்திருந்தார்*

*தமிழ்நாடு மோட்டார் வாகன விதிகளில் திருத்தம் செய்வது தொடர்பாக கருத்துக் கேட்பு.*

🐠🐠🐠🐠🐠

    👉வெளியானது குரூப்-1 முதன்மை தேர்வு முடிவுகள்: 


மார்ச் 4,5,6 ம் தேதிகளில் நடைபெற்ற குரூப் -1 எழுத்து தேர்வு முடிவுகள் வெளியீடு.


137 பேர் நேர்முகத் தேர்வுக்கு தகுதி பெற்றுள்ளனர்.


ஜூலை 13,14,15ம் தேதிகளில் நேர்முகத் தேர்வு நடைபெறும் - அரசு பணியாளர் தேர்வாணையம்.

🐠🐠🐠🐠🐠

    👉ஆந்திராவில் கோரவிபத்து - உயர் அழுத்த மின் கம்பி அறுந்து ஆட்டோவில் விழுந்ததில் 8 பேர் பலி...

🐠🐠🐠🐠🐠

    👉அதிமுக பொதுக்குழு விவகாரம்:நத்தம்விஸ்வநாதன் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் 


23 தீர்மானங்கள் மட்டுமே நிறைவேற்ற வேண்டும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மனு தாக்கல்


பொதுக்குழுவைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்டோர் தனித்தனியாக மனுத்தாக்கல் செய்ய உள்ளதாகவும் தகவல்

🐠🐠🐠🐠🐠

    👉சென்னை முகப்பேர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் ஸ்ரீதர், போக்சோ வழக்கில் கைது


பள்ளி மாணவிகளிடம் ஆபாச உரையாடலில் ஈடுபட்டதாக சமூக வலைதளங்களில் வீடியோ பரவிய நிலையில், மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரி புகாரின் பேரில் திருமங்கலம் போலீசார் நடவடிக்கை

🐠🐠🐠🐠🐠

    👉தொழிலதிபர் கடத்தல் வழக்கில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட சென்னை திருமங்கலம் காவல் உதவி ஆணையருக்கு முன்ஜாமின்


விசாரணை அதிகாரி முன்பு ஆஜராகி ஒத்துழைக்க வேண்டும் என நிபந்தனை விதித்தும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

🐠🐠🐠🐠🐠

 👉நூபுர் ஷர்மாவுக்கு ஆதரவு தெரிவித்த ராஜஸ்தான் டெய்லர் தலை துண்டித்து படுகொலை - குற்றவாளிகள் இருவர் கைதுசெய்யப்பட்ட நிலையில் தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை


    👉மதத்தின் பெயரால் வன்முறையை ஏற்க முடியாது" -உதய்பூர் படுகொலைக்கு ராகுல் காந்தி கடும் கண்டனம்

🐠🐠🐠🐠🐠

    👉ஜெர்மனி, ஐக்‍கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளில் சுற்றுப் பயணம் நிறைவு - நாடு திரும்பினார் பிரதமர் மோடி

🐠🐠🐠🐠🐠


திருமதி மோகனா