🌹தேமுதிக தலைவர் விஜயகாந்த் நன்றி🌹... மேலும் சில செய்தித் துளிகள்

 


    🙏தனது உடல்நிலை நலம்பெற வாழ்த்தியவர்களுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் நன்றி


பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை, ஓபிஎஸ், ஈபிஎஸ் உள்ளிட்டோருக்கு விஜயகாந்த் நன்றி

🌺🌺🌺🌺🌺

        👮மாவோயிஸ்ட் அமைப்புடன் தொடர்பில் இருந்த விருதுநகரை சேர்ந்த ஐயப்பன் என்பவரை தேசிய புலனாய்வு முகமை கைது செய்தது


கேரள மாநிலம் மலப்புரம் அருகே நிலம்பூர் வனப்பகுதியில் மாவோயிஸ்ட் அமைப்பில் இணைந்து பயிற்சி பெற்றதாக எழுந்த புகாரில் NIA நடவடிக்கை

🌺🌺🌺🌺🌺

    👉தமிழக அரசின் தாய் - சேய் நலப் பெட்டக டெண்டரை எதிர்த்த வழக்கு தள்ளுபடி


டெண்டரை நிராகரித்த உத்தரவை எதிர்த்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு


சப்ளை நிபந்தனையை பூர்த்தி செய்யவில்லை என அரசு தரப்பு விளக்கம்

🌺🌺🌺🌺🌺

    👋👉ரேசன் கடைகளில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள விதிமுறைகள் மாற்றப்படும் - ராதாகிருஷ்ணன்


உணவு பாதுகாப்புத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி

🌺🌺🌺🌺🌺

    👮திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே கள்ளகாதலியை வெட்டிக் கொலை செய்து சாக்குப்பையில் கட்டி சாலையோரம் வீசி சென்ற நபர் கைது

🌺🌺🌺🌺🌺

"    👉சாதாரண குடும்பத்தில் இருந்து வந்த ஓபிஎஸ், இபிஎஸ்-சை தலைவராக்கி அழகு பார்த்த கட்சி அதிமுக;


இந்த இயக்கத்தை சாதி மதத்தின் பெயரைச் சொல்லி பிரிக்க முடியாது"- முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு

🌺🌺🌺🌺🌺

    👉*திண்டுக்கலில் சீமான் பேட்டி*


திமுக அரசு ஒரு வருடத்தில் 8% கூட திட்டங்களை அமல்படுத்தவில்லை விளம்பரத்தை மட்டும் நம்பி ஆட்சி செய்கிறார்கள். இலங்கை தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க வேண்டும். அம்பானி அதானியை உலக கோடீஸ்வரர் ஆக மாற்றியது தான் மோடி அரசின் எட்டு வருட சாதனை.

🌺🌺🌺🌺🌺

    👉பக்கோடா விற்பதும், பஜ்ஜி போடுவதும் வேலைவாய்ப்பா? - ப.சிதம்பரம் பேச்சு

🌺🌺🌺🌺🌺


செய்தியாளர் கார்த்திக்