வேப்பேரி துணை ஆணையரின் அதிரடி செயல்

 


    சென்னை: சூலை அங்காளம்மன் கோவில் தெருவில் டிபன் கடையில் சாப்பாடும், சமோசாவும் வாங்கிக் கொண்டு காசு தராமல் காசு கேட்ட கடையில் வேலை செய்யும் நபரை அடிக்கும் காட்சிகள் சிசிடிவி வீடியோ மூலம் சமூக வலைதளங்களில் பரவியது.

வீடீயோ


இச்செய்தியை அறிந்த துணை ஆணையாளர் திரு ஹரிகுமார் அவர்கள் கடை உரிமையாளரிடம் தொலைபேசியில் பேசி விபரங்களை கேட்டறிந்து இதுபோன்ற சம்பவங்கள் இனி நடைபெறாது நீங்கள் தைரியமாக வியாபாரம் செய்யுங்கள் உங்களுக்கு இது போன்ற சம்பவங்கள் நடந்தால் உடனடியாக எண்ணையை நேரடியாக தொடர்பு கொள்ளலாம் என்று தைரியம் கொடுத்தது மட்டுமல்லாமல்,


ஒரு தனிப்படை அமைத்து கே.எம் கார்டன் பகுதியை சார்ந்த ரவுடி விஜய்யை    வேப்பேரி காவல் துறையால் (10.06.22 ) காலை கைது செய்தனர். காவல்துறையினர் அங்காளம்மன் கோயில் தெருவில் அமைந்துள்ள டிபன்  கடைக்கே நேரடியாக வந்து தைரியம் கொடுத்ததை சூலை பகுதிவாழ் மக்கள் பாராட்டினர்.


வெப்பேரி துணை ஆணையாளர் திரு ஹரிகுமார் அவர்கள் புளியந்தோப்பு, எம்.கே.பி நகர் பகுதியில்  ரவுடித்தனம் செய்பவர்கள், கட்டப் பஞ்சாயத்தில் ஈடுபடுபவர்களை  ஒடுக்குவதில் திறம்பட செயல்பட்டவர். அப்பகுதி மக்களிடம் மிகுந்த நற்பெயரை பெற்றவர்.


இவர் எங்கு பணி புரிந்தாலும் நேரடியாக மக்களிடமே தொடர்பு கொண்டு அவர்கள் பிரச்சினைகளை தீர்ப்பதில் ஆர்வம் கொண்டவர் அதிரடியான  இச்செயலை அப்பகுதி மக்கள் மிகவும் பாராட்டுகிறார்கள்.


செய்தியாளர் பாஸ்கர்