தமிழகத்தில் Rs31,400 கோடி மதிப்பிலான திட்டங்களை நாட்டிற்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி

 


       🌹 சென்னை வந்தார் பிரதமர் மோடி🌹

  

  சென்னை நேரு விளையாட்டு அரங்கில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பிரமாண்ட விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. நேரு விளையாட்டு அரங்கில் பங்கேற்க சென்னை விமான நிலையம் வந்த பிரதமர் மோடியை ஆளுநர், அமைச்சர்கள் பொன்னாடை போற்றி வரவேற்றனர். 

🍀5 முடிவுற்ற திட்டங்கள்  திறப்பு🍀

🌹ரூ.506 கோடி மதிப்பில் மதுரை - தேனி அகல ரயில் பாதை திட்டத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார்

🌷ரூ598 கோடி செலவில் அமைக்கப்பட்ட சென்னை தாம்பரம் - செங்கல்பட்டு 3வது ரயில் பாதை திட்டத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார்

🌷 ரூ.849 கோடி மதிப்பில் எண்ணூர் - செங்கல்பட்டு குழாய் மூலம் இயற்கை எரிவாயு திட்டத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார்

🌷 ரூ.911 கோடி மதிப்பில் திருவள்ளூர் - பெங்களூரு குழாய் மூலம் இயற்கை எரிவாயு திட்டத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார்

🌷ரூ.116 கோடி மதிப்பில் பிரதம மந்திரி அனைவருக்கும் வீடு திட்டத்தில் 1,152 வீடுகளை பயனாளிகளிடம் ஒப்படைத்தார்.

🍀அடிக்கல் நாட்டும் திட்டம்🍀

🌺ரூ14,982 கோடி மதிப்பில் சென்னை - பெங்களூரு அதிவிரைவு சாலை திட்டத்திற்கு அடிக்கல்

🌺 ரூ5,852 கோடி மதிப்பில் சென்னை துறைமுகம்-மதுரவாயல் நான்கு வழி பறக்கும் சாலை திட்டத்திற்கு அடிக்கல்

🌺ரூ. 3,871 கோடி மதிப்பில் தர்மபுரி - நெரலூரு நான்கு வழிப்பாதை திட்டத்திற்கு அடிக்கல்

🌺ரூ.724 கோடி மதிப்பில் மீன்சுருட்டி - சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை திட்டத்திற்கு அடிக்கல்

🌺 ரூ.1803 கோடி மதிப்பில் சென்னை, எழும்பூர், ராமேஸ்வரம், மதுரை, காட்பாடி, குமரி ரயில் நிலையங்களை நவீனமயமாக்கும் திட்டத்திற்கு அடிக்கல்🍁முதல்வர் மு.க. ஸ்டாலின் பேச்சு🍁

தமிழ் மொழியை இந்திக்கு நிகரான அலுவல் மொழியாகவும், சென்னை உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாகவும் ஆக்க வேண்டும்;

நீட் தேர்விலிருந்து விலக்கு வேண்டும்: முதலமைச்சர் ஸ்டாலின் பிரதமருக்குக் கோரிக்கை

கட்சத்தீவை மீட்டெடுத்து உரிமையை நிலைநாட்ட இது தகுந்த தருணம் - முதல்வர் மு.க.ஸ்டாலின்

தமிழகம் அனைவருக்குமான வளர்ச்சியை உள்ளடக்கிய மாநிலம் இதைத்தான் "திராவிட மாடல்" என நாங்கள் அழைக்கிறோம்.

சமூக நீதி சமத்துவம் பெண்கள் முன்னேற்றம் என அனைத்திலும் முன்னோடியாக இருக்கிறோம்: பிரதமர் மோடி இருந்த  மேடையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பேச்சு💐பிரதமர் மோடி உரை💐


‘செந்தமிழ் நாடெனும் போதினிலே.. இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே’ என்ற பாரதியாரின் பாடலை மேற்கோள் காட்டினார் பிரதமர்

தேசிய கல்விக் கொள்கை அவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கிறது. இந்திய மொழிகளை ஊக்குவிப்பதற்காக தேசியக் கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. பொறியியல், மருத்துவப் படிப்புகளை தாய் மொழியில் படிக்க முடியும். தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் இதனால் பயனடைவார்கள்.


பிரதமர் நரேந்திர மோடி பேசியது: "ஒவ்வொரு துறையிலும் தமிழகத்தைச் சேர்ந்த யாராவது ஒருவர், தலைசிறந்தவராக விளங்குகின்றனர். அண்மையில்தான் நான், காதுகேளாதோருக்கான ஒலிம்பிக்ஸ் போட்டியில் பங்கேற்றவர்களுக்கு எனது இல்லத்தில் வரவேற்பு அளித்தேன். இதுவரை நடந்த போட்டிகளில் இதுதான் இந்தியாவின் ஆகச்சிறந்த செயல்பாடு என்பதை நீங்கள் அறிவீர்கள். நாம் வென்ற 16 பதக்கங்களில் தமிழகத்தைச் சேர்ந்த 6 பேரின் பங்கு இருந்தது. அணிக்கு மிகச்சிறந்த பங்களிப்பு.அண்டை நாடான இலங்கை மிகுந்த கடினமான சூழலை கடந்துகொண்டுள்ளது. நெருக்கடி நிலையில் உள்ள இலங்கைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் இந்தியா செய்து வருகிறது. எரிபொருள், பண உதவி, அத்தியாவசியப் பொருட்கள் என அனைத்து விதமான உதவிகளையும் இந்தியா செய்துவருகிறது' என்று பிரதமர் மோடி கூறினார்.


மத்திய அரசின் நோக்கம். சமூக கட்டமைப்பை மேம்படுத்துவதன் மூலம் ஏழைகளின் நலனை உறுதி செய்ய முடியும். அனைத்து துறை திட்டங்களும் அனைவருக்கும் சென்று சேரும்படி செயல்பட்டு வருகிறோம். ஒவ்வொரு வீட்டிற்கும் குழாய்வழி குடிநீர் கொண்டு செல்ல பணியாற்றி வருகிறோம்.

பாரத் மாதா கீ ஜே... வந்தே மாதரம்...

சென்னையில் முதலமைச்சர் முன்னிலையில் நடைபெற்ற அரசு விழாவின் இறுதியில்  பிரதமர் மோடி, பாரத் மாதா கீ ஜே என 3 முறையும், வந்தே மாதரம் என 5 முறையும் முழக்கமெழுப்பினார்.


இந்த நிகழ்ச்சியில்,  ஆளுநர் ரவி, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, சென்னை மேயர் பிரியா, துணை மேயர், டிஜிபி சைலேந்திர பாபு, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மற்றும் பாஜக தலைவர்கள் வரவேற்றனர்.


செய்தியாளர் மணிவண்ணன்