"காமராசரை மதிப்பவன் நான்" முதல்வர்

 


        சென்னை: 9 ஏழை ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைத்த முதல்வர்


  இன்றைய KolathurVisit-இல் 9 ஜோடிகளுக்குத் திருமணத்தை நடத்தி வைத்து அவர்கள் இல்லற வாழ்வு சிறப்பாக அமைய வாழ்த்திய தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள்


 திரு.வி.க. நகரில் 9 ஏழை ஜோடிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருமணம் நடத்தி வைத்து மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். காமராஜர் மாநகராட்சி மண்டபத்தில் புதுமண தம்பதியருக்கு முதலமைச்சர் சார்பில் 33 பொருட்கள் சீர்வரிசை வழங்கப்படுகிறது. தங்கத் தாலி, பீரோ, கட்டில், மிக்ஸி, அடுப்பு, சமையலுக்கான பாத்திரங்கள் உள்ளிட்டவை சீர்வரிசையாக வழங்கப்பட்டன."இந்த கல்யாணத்துக்கு வந்ததும் என் கல்யாணம் ஞாபகம் வந்துருச்சு"

சிரித்த முதல்வர் ஸ்டாலின்


இந்த திருமண விழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், 'நான் முதல் முறை கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகி ஆய்வு நடத்தியபோது இந்த மண்டபம் சமூக விரோதிகளால் பாழடைந்து கிடந்தது. காமராசரால் 1966ஆம் ஆண்டு இந்த மண்டபம் திறக்கப்பட்டது. நான் இந்த மண்டபத்தை சீரமைக்கக்கூடாது என அரசியல் காழ்ப்புணர்வால் சிலர் வழக்கு தொடர்ந்தனர்.


வழக்கை கழக  வழக்கறிஞர்கள் மூலம் தீர்ப்பு பெற்று குளிர்சாதன வசதிகள், லிப்ட், பார்க்கிங் வசதியுடன் முழுமையாக மண்டபத்தை கட்டி முடித்துள்ளோம். 700 பேர் வரை மண்டபத்தில் அமர முடியும். சீரமைத்த பிறகும் காமராசர் பெயரிலேயே இந்த மண்டபம் இருக்கிறது. காமராசர்  திறந்து வைத்ததற்கான கல்வெட்டும் அப்படியே இருக்கிறது. அரசியல் ரீதியாக மட்டுமின்றி தனிப்பட்ட முறையிலும் காமராசரை மதிப்பவன் நான்.


செய்தியாளர் கார்த்திக்