ஆம் ஆத்மி கட்சியின் மே தின நிகழ்ச்சி

 


        மே தினத்தை முன்னிட்டு(01-05-22) இன்று ஆம் ஆத்மி கட்சி தமிழ்நாடு மாநில தலைவர் திரு.வசீகரன் அவர்கள் தலைமையில் சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள உழைப்பாளர் சிலைக்கு மரியாதை செலுத்தப்பட்டது. அதன்பின்  சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள "மே தின தூன்" க்கு சென்று மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாநில பொதுச்செயலாளர் திரு. ஜோசப் ராஜா, மாநில மகளிர் அணி செயலாளர் திருமதி. ஸ்டெல்லா மேரி, செங்கை மாவட்ட செயலாளர் திரு. சரத் லோகநாதன், வட சென்னை மாவட்ட செயலாளர் திருமதி. சோபியா, .வடசென்னை மாவட்ட சிறு பான்மையர் பிரிவு தலைவர் திரு S.சம்சுதீன் தென் சென்னை மாவட்ட தலைவர். திரு. சேரலாதன், மூத்த உறுப்பினர் திரு. பழநி மோசஸ், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் சேர்ந்த கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.


என்றும் மக்கள் குரலாய் மக்கள் பணியில் உங்கள் சகோதரி சோபியா மாவட்ட செயலாளர் வடக்கு ஆம் ஆத்மி கட்சி தமிழ்நாடு


ஆம்ஆத்மி கட்சி புதிய மாவட்ட நிர்வாகிகள் இணைப்புக் கூட்டம்* ஆம் ஆத்மி கட்சி தமிழ்நாடு அண்ணா நகர் தலைமை அலுவலகத்தில் இன்று மாலை சுமார் ஆறு மணி அளவில் மாவட்ட நிர்வாகிகள் இணைப்பு கூட்டம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இதில்  மாநில தலைவர் திரு . வசீகரன் அவர்கள் முன்னிலையில் உடன்  மாநில பொதுச் செயலாளர் திரு .ஜோசப் ராஜா  மாநில பொருளாளர் திரு சீனிவாசன் மாநில மகளிர் அணி செயலாளர் திருமதி ஸ்டெல்லா மற்றும் வடசென்னை மாவட்ட செயலாளர் திருமதி சோபியா ஆகியோர் முன்னிலையில் இன்று 20 வதுக்கும்.மேற்பட்டோர் ஆம் ஆத்மி கட்சியில் தங்களை இனைத்து கொண்டனர்  திரு சம்சுதின் வடசென்னை மாவட்ட சிறுபான்மையர் பிரிவு  திரு குமரவேல் வடசென்னைமாவட்ட வர்தக பிரிவு திரு பாலாஜி  திரு டேனியல் மற்றும் பலர்கலந்து கொண்டு கூட்டத்தை சிறப்பித்தனர்.செய்தியாளர் பாலாஜி