மணல் கடத்தல்காரர்களை கைது செய் மதுரை உயர்நீதிமன்றம்... மேலும் சில செய்தித் துளிகள்

 


        👉மணல் கடத்தலில் தொடர்புடையவர்கள் மீது வழக்குப்பதிந்தும் நீண்ட நாட்களாக கைது செய்யாமல் இருப்பது ஏன்? - போலீசாருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி


மணல் திருட்டு உள்ளிட்ட வழக்குகளில் முன் ஜாமின் மனு தாக்கல் செய்தவர்களை கைது செய்ய உத்தரவு

🍁🍁🍁🍁🍁

    👉மதுரை ஆவினில் 2020ம் ஆண்டில் பணி நியமனம் பெற்றவர்கள் நேரில் ஆஜராக சம்மன்;


தகுதி இல்லாதவர்களுக்கு பணி வழங்கியது, எழுத்து தேர்வு வினாத்தாள் கசிவு உள்ளிட்ட முறைகேடுகள் நடந்ததாக புகார்

🍁🍁🍁🍁🍁

🌹முதல் பெண் போர் விமானியாக அபிலாஷா பாரக் நியமனம்🌹

🍁🍁🍁🍁🍁

    👉வட்டாச்சியர் அலுவலகங்களில் மாவட்ட ஆட்சியர்கள் நேரில் சென்று ஆய்வு செய்ய உத்தரவு..! 


அமைச்சர் கே.கே.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் உத்தரவு

🍁🍁🍁🍁🍁

    👉பிரதமர் மோடி இன்று மாலை சென்னை வருகை


நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்பு


*தமிழகத்தில் ₨31,400 கோடி மதிப்பிலான 11 திட்டங்களை துவக்கி வைக்கிறார்

🍁🍁🍁🍁🍁

    👮நெல்லை : அம்பை அருகே மூலச்சி பகுதியில் கல்லூரி மாணவி இந்திராணி(20) விஷம் குடித்து தற்கொலை - போலீசார் விசாரணை

🍁🍁🍁🍁🍁

    😢சென்னை வியாசர்பாடியில் இருசக்கர வாகனத்தில் அதி வேகமாக சென்ற ராஜ்குமார்(24) என்ற இளைஞர், வேகத்தடையில் ஏறி இறங்கியபோது நிலை தடுமாறி கீழே விழுந்து உயிரிழப்பு! 


புளியந்தோப்பு போக்குவரத்து புலனாய்வு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து விசாரணை!

🍁🍁🍁🍁🍁

    👉கந்து வட்டி கொடுமையால் தீக்குளித்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு - சென்னையில் அதிர்ச்சி சம்பவம்

🍁🍁🍁🍁🍁

😢செனகல் : திவாவோன் பகுதியில் உள்ள மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு😢

🍁🍁🍁🍁🍁

    👉கோவை வெள்ளயங்கிரி மலையேறும் போது மூச்சுத்திணறல் ஏற்பட்டு சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் இளஞ்செழியன் (55) உயிரிழப்பு


நேற்றிரவு மலையேற்றத்தை தொடங்கிய அவர், 5வது மலையை ஏறும் போது மயங்கி விழுந்துள்ளார்

🍁🍁🍁🍁🍁

    👉டெல்லி தியாகராஜ் அரங்கில் உயர் அதிகாரிகள் தங்களது வளர்ப்பு நாய்களுடன் வாக்கிங் செல்வதற்காக, 


பயிற்சியில் ஈடுபடும் விளையாட்டு வீரர்களை தினமும் மாலை 7 மணிக்குள் வெளியேற சொல்வதாக சர்ச்சை எழுந்த நிலையல்


இனி இரவு 10 மணி வரை விளையாட்டு அரங்கத்தை திறந்து வைக்க டெல்லி அரசு உத்தரவு

🍁🍁🍁🍁🍁

செய்தியாளர் பாலாஜி