கலைஞர் சிலையை திறந்து வைத்தார் குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு

 


    கலைஞர் சிலையை திறந்து வைத்தார் குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு


சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் தமிழக அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதியின் முழு உருவ வெண்கலச் சிலையை குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு இன்று திறந்து வைத்தார்.


12 அடி உயர பீடத்தில், 16 அடி உயரத்தில் ரூ.1.7 கோடி மதிப்பில் கருணாநிதியின் முழு உருவ வெண்கலச் சிலை நிறுவப்பட்டது.இந்த சிலையை குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு இன்று மாலை திறந்து வைத்தார். 

இந்த நிகழ்ச்சியில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், திமுக சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், திமுக கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.


    திமுக தலைவர் கருணாநிதி, தமிழகத்தில் 5 முறை முதல்வராக இருந்தவர். 60 ஆண்டுகள் தமிழக சட்டப்பேரவை உறுப்பினராக இருந்துள்ளார். இவர் கடந்த 2018 ஆகஸ்ட் 7-ம் தேதி மறைந்தார். சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிடம் அருகே அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. அங்கு அவருக்கு நினைவிடம் அமைக்கப்பட்டு வருகிறது.


சிலை திறப்புக்குப் பிறகு கலைவாணர் அரங்கில் நடந்த நிகழ்ச்சியில், முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர்கள், எம்.பி. கனிமொழி, எம்.எல்.ஏக்கள், கட்சி நிர்வாகிகள், ரஜினிகாந்த், வைரமுத்து உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.     கலைஞர் கருணாநிதி சிலையில்  5 வாசகங்கள் பொறிக்கப்பட்டுள்ளது தற்போது அந்த வாசகங்கள் பலத்த வரவேற்பு பெற்றுள்ளது. சிலையில் பொறிக்கப்பட்டுள்ள 5 வாசகங்கள் பின்வருமாறு:


🌷அண்ணா வழியில் அயராது உழைப்போம்


🌷 இந்தி திணிப்பை எதிர்ப்போம்


🌷 ஆதிக்கமற்ற சமுதாயத்தை அமைத்தே தீருவோம்


🌷 மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி


🌷 வன்முறையை தவிர்த்து வறுமையை வெல்வோம்


தமிழ்நாட்டை தலை நிமிர வைத்தவர் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி அவர்கள்    முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி சிலை திறப்பு நிகழ்ச்சியில் அமைச்சர் துரைமுருகன் வரவேற்புரை 

ஓமந்தூரார் வளாகத்தில் சட்டப்பேரவையை செங்கல், செங்கல்லாக செதுக்கியவர் மு.கருணாநிதி

சிலையைப் பார்த்து விட்டு கண்ணீர் விடாமல் வெளியே வரமுடியவில்லை; நேரில் பார்ப்பதைப் போலவே சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது- அமைச்சர் துரைமுருகன்

மு.கருணாநிதி சிலையை பார்த்தபோது நெஞ்சம் உருகிவிட்டது - கருணாநிதி கைது செய்யப்பட்ட போது துடித்தவர் வெங்கையா நாயுடு-அமைச்சர் துரைமுருகன்.


🌹குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு உரை🌹


முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி சிலை திறப்பு நிகழ்ச்சியில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தமிழில் உரையை தொடங்கினார்


கருணாநிதியின் சிலையை திறந்து வைத்ததில் பெரும் மகிழ்ச்சி - குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு💐நவீன தமிழ்நாடு கலைஞரால் உருவாக்கப்பட்டது - முதல்வர் பேச்சு💐


தமிழகத்தில் தோன்றிய திராவிட மாடல் நாடு முழுவதும் பரவி விட்டது என்றும் இன்னும் சில ஆண்டுகளில் நாடு முழுவதும் திராவிட மாடல் ஆட்சி நடக்கும் என்றும் அவர் தெரிவித்தார்


கருணாநிதியின் கொள்கைகளை வருங்கால சந்ததிகளுக்கு கொண்டு செல்வோம் என்றும் அதற்காக நாடு முழுவதும் திரையிடல் பயிற்சிகள் நடத்தப்படும் என்றும் முதல்வர் ஸ்டாலின் கூறினார்


திராவிட மாடல் என்பது பொருளாதார ரீதியில் உயர்வது மட்டுமின்றி சமூக நீதி பெண்கள் உயர்வு உள்ளிட்ட பல அம்சங்களை கொண்டது என்றும் முதல்வர் விளக்கம் அளித்தார்


திராவிட மாடல் குறித்து தெருமுனை கூட்டங்கள் நடத்தி மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.


செய்தியாளர் திருமதி மோகனா