பெயர் சூட்டுவாரா முதல்வர் வடசென்னை மக்கள் கையெழுத்து புரட்சி

 


        மெட்ரோ ரயில் நிலையத்திற்கு ஐந்து ரூபாய் மருத்துவர் டாக்டர் ஜெயச்சந்திரன் பெயர் சூட்ட வலியுறுத்தி சென்னை ராயபுரத்தில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து கையெழுத்திட்டனர்

       

வடசென்னை மெட்ரோ ரயில் நிலையத்திற்கு டாக்டர் ஜெயச்சந்திரன் பெயரை நிச்சயம் சூட்டுவார் முதல்வர் ஸ்டாலின் என்று திமுக சட்டமன்ற உறுப்பினர் ஐட்ரீம்   மூர்த்தி நம்பிக்கை தெரிவித்தார்

 


வண்ணாரபேட்டையில் உள்ள ஐந்து ரூபாய் டாக்டர்  ஜெயச்சந்திரன் இல்லத்தின் முன்பு நடந்த இந்த   கையெழுத்து இயக்கத்தை சமூக ஆர்வலர் கல்யாணசுந்தரம, ராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஐட்ரீம் மூர்த்தி ஆகியோர் தொடங்கி வைத்தார்.


 இந்த நிகழ்ச்சியில் பேசிய ராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஐட்ரீம் மூர்த்தி கூறுகையில் வடசென்னையில் மெட்ரோ ரயில் திட்டம் வருவதற்கு காரணமாக இருந்தவர்கள் அன்றைய முதல்வர் கலைஞரும் ஐந்து ரூபாய் மருத்துவர் ஜெயச்சந்திரன்  இன்றைக்கு வட சென்னையில் ஒரு பெருமையாக  மெட்ரோ ரயில் திட்டம் இருக்கிறது என்றால் அதற்கு ஜெயச்சந்திரன் காரணம்முன்பெல்லாம் சமூக விரோத சக்திகளுக்கு பெயர் பெற்றதாக வடசென்னை சினிமாக்களில்  சித்தரிக்கப்பட்டது.இப்போதுதென் சென்னைக்கு இல்லாத பெருமை வட சென்னைக்கு இருக்கிறது ஏனென்றால் இங்கு மெட்ரோ ரயில் திட்டம் வந்திருக்கிறது. போக்குவரத்து வந்திருப்பதால் தகவல் தொழில்நுட்பம் வளர்ந்திருக்கிறது அதனால் தான் சென்னையில் இருப்பவர்கள்  எல்லாம் வடசென்னைக்கு ஓடி வந்து கொண்டிருக்கிறார்கள். இன்றைக்கு நீங்கள் இந்த கோரிக்கை வைத்து கையெழுத்து இயக்கம் நடத்துகிறீர்கள் கோரிக்கை வைக்காமல் நிறைவேற்றுபவர் முதலமைச்சர் ஸ்டாலின் எனவே உங்கள் கோரிக்கைநிச்சயம் நிறைவேறும் இந்த கோரிக்கையை வலியுறுத்தி நான் மட்டுமல்ல ஆர்கேநகர் உறுப்பினர் எபினேசரும் பேசியிருக்கிறார் வருங்காலத்தில் திருவொற்றியூர் உறுப்பினரும் பேசுவார் பெரம்பூர் உறுப்பினர் ஆர் டி சேகரும் பேசுவார் நல்ல கோரிக்கைகளை முதலமைச்சர் கண்டிப்பாக நிறைவேற்றுவார் இந்தக் கோரிக்கையையும் நிச்சயம் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது என்றார்இந்த நிகழ்ச்சியில்  நடிகர் கே ராஜன் திமுக சட்ட திட்ட குழு உறுப்பினர் நா. மனோகரன் ஆர் எம் டி ரவீந்திரன் மாமன்ற உறுப்பினர் எம்எஸ் திரவியம் திருவொற்றியூர் ஆயுர்வேத மருத்துவர் ராஜகுமார், முன்னாள் கவுன்சிலர்கள் மு.சம்பத் , ம்கே பாபுசுந்தரம்,அகில இந்திய மீனவர் சங்கத்தின் பொதுச்செயலாளர் பரணி தரன் மற்றும் தனசேகரன், இந்திய மீனவர் சங்கத்தின் தலைவர் எம் டி தயாளன், காங்கிரஸ்கட்சியின் மாநில பொதுச்செயலாளர் இராமலிங்க ஜோதி வடசென்னை மாவட்ட பிஜேபி செயலாளர் வன்னியராஜன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பகுதி செயலாளர் மு.ராமச்சந்திரன், ஆர்கே நகர் பகுதி கம்யூனிஸ்ட் கட்சி துணை செயலாளர் ராமலிங்கம், அறிஞர் அண்ணா பூங்கா நடப்போர் நலச்சங்க செயலாளர் குணசேகரன் வடசென்னை தமிழ் இளைஞர் கழகத்தின் தலைவர் மோதிலால், பாமக மாநில துணைப் பொதுச் செயலாளர் ராதாகிருஷ்ணன் வடசென்னை மாவட்ட செயலாளர் வண்ணை சத்யா அரசு பணியாளர் மாநில செயலாளர் பால்பாண்டி, ராயபுரம் ரவுண்டப் நிர்வாகிகள் ஜெயமோகன், கஸ்தூரி மற்றும் வழக்கறிஞர் ஜோதி ஆம் ஆத்மி மாவட்ட மாவட்ட தலைவர் பரூக் செயலாளர் சோபியா பாமா ராணி, பிரபல டாக்டர்கள் மோகன் ,ரவி ,பார்த்திபன் ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


ராமச்சந்திரன்