ஒரு வரிச் செய்திகள்

 


        💐ஜெர்மனியில் நடந்த ஏலத்தில் ரூ.1100 கோடிக்கு விற்கப்பட்டதன் மூலம், உலகின் மிகவும் விலையுயர்ந்த கார் என்ற பெருமையை 1955 ஆம் ஆண்டின் மெர்சிடஸ் பென்ஸ் 300 எஸ்எல்ஆர் கார் பெற்றுள்ளது.

🌴🌴🌴🌴🌴

     👮விருதுநகரில் கடந்த 2011ம் ஆண்டு ஒரே வீட்டில் 4 பேர் தற்கொலை செய்த வழக்கு - சம்மன் அனுப்பியும் விசாரணையில் ஆஜராகாத ஸ்ரீவில்லிப்புத்தூர் காவல் ஆய்வாளர் சண்முகசுந்தரத்திற்கு பிடிவாரண்ட் பிறப்பித்து மகளிர் நீதிமன்றம் உத்தரவு

🌴🌴🌴🌴🌴

    👉மின் இணைப்பு கொடுப்பதாக அரசு அறிவித்தது அறிவிப்பாகத்தான் உள்ளது - கடலூர் விவசாயிகள் புகார்

🌴🌴🌴🌴🌴

    👉பெரம்பலூர் பாலக்கரையில் உதயநிதி ஸ்டாலின் நடித்த 'நெஞ்சுக்கு நீதி' படத்திற்கு வாழ்த்து தெரிவித்து ப்ளக்ஸ் வைத்த காவலர் மீது பெரம்பலூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

🌴🌴🌴🌴🌴

    👉வடசென்னை அனல் மின் நிலையத்தில் பணிக்கு சென்ற உதவி செயற்பொறியாளரை காணவில்லை என மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்த நிலையில், அனல் மின் நிலையத்தில் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

🌴🌴🌴🌴🌴

    👉ஹைதராபாத்தில் உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது - மத்திய சுகாதாரத்துறை

🌴🌴🌴🌴🌴

    🙏தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டியில் பி.வி.சிந்து அரை இறுதிக்கு முன்னேற்றம்


நடப்பு சாம்பியன் அகனே யமகுச்சியை 21-15, 20-22, 21-13 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேற்றம்

🌴🌴🌴🌴🌴

     🌹மத்திய அரசுக்கு ரூ.30,000 கோடி வழங்குகிறது ஆர்பிஐ

🌴🌴🌴🌴🌴

    👦காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அருகே சின்ன மதுரபாக்கத்தில் 16, 10 வயதுடைய 2 மகள்களை அடித்துக்கொலை செய்துவிட்டு காவல் நிலையத்தில் தந்தை கோவிந்தராஜ் சரண்


மனைவி உடன் சண்டையிடுவதை மகள்கள் கண்டித்ததால், ஆத்திரத்தில் அடித்துக்கொன்றதாக வாக்குமூலம்.

🌴🌴🌴🌴🌴

    👉விசா முறைகேடு வழக்கில் சிபிஐ விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும்


கார்த்தி சிதம்பரத்துக்கு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு


நாடு திரும்பிய 16 மணி நேரத்துக்குள் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் - சிபிஐ சிறப்பு நீதிமன்றம்

🌴🌴🌴🌴🌴

    👉மேட்டுப்பாளையத்தில் திருமணமான ஆறே மாதத்தில் பெண் மருத்துவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட விவகாரம் குறித்து வருவாய் கோட்டாச்சியர் நேரில் சென்றூ விசாரணை நடத்திவருகிறார்.

🌴🌴🌴🌴🌴

    👊அரியலூர் 8 வயது சிறுமியை கடத்திச்சென்று முத்தம் கொடுத்த  வாலிபருக்கு 17ஆண்டு சிறை தண்டனை-மகிளா நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.

🌴🌴🌴🌴🌴

    👦சேலத்தில் குரும்பப்பட்டி பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து ஆயுதங்கள் தயாரித்ததாக 2 இளைஞர்கள் கைது 


ரகசிய தகவலை அடுத்து இளைஞர்களை கியூ பிரிவு போலீசார் மடக்கி பிடித்தனர்

🌴🌴🌴🌴🌴

    👉பாலியல் தொழிலாளர்களுக்கு ஆதார் அடையாள அட்டை வழங்க உச்சநீதிமன்ற நீதிபதி நாகேஸ்வராவ் அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது.

🌴🌴🌴🌴🌴

    👉சேலத்தில் நகை சீட்டு, நகை முதலீடு மோசடி வழக்கில் தொடர்புடைய லலிதாம்பிகை ஜுவல்லர்ஸ் நகைக் கடையில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மேலும், தலைமறைவாக உள்ள நகைக்கடை உரிமையாளர் மற்றும் அவரது மனைவியை தேடி வருகின்றனர்.     👊👉புதுச்சேரியில் அரசு நிறுவனமான பாண்லே பால் பொருட்களின் விலை திடீரென உயர்த்தப்பட்டு உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.

🌴🌴🌴🌴🌴


செய்தியாளர் தங்கராஜ்