ஆப்பரேஷன் கஞ்சா 2.0 நடத்தப்படுவது போல், ஆப்பரேஷேன் கள்ளச் சாராயம் 2.0 நடத்தப்படுமா?
தமிழக அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி கேள்வி
கள்ளச் சாராயம், போதைப் பொருட்களில் இருந்து மக்களை காக்க காவல் துறையினரை சுதந்திரமாக செயல்பட அரசு அனுமதிக்க வேண்டும் - ஈபிஎஸ்
🐠🐠🐠🐠🐠
👉தமிழ்நாடு முதலமைச்சர் பேரறிவாளனுக்கு வாழ்த்து தெரிவித்தது குறித்து கருத்து கூற விரும்பவில்லை;
பிற கட்சிகள் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழிங்கி கொண்டாடுவது மன வேதனையாக உள்ளது
- புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி
🐠🐠🐠🐠🐠
👉திண்டுக்கல் மாநகராட்சியின் சிறப்பு மாமன்ற கூட்டம் நடைபெற்றது. இதில் சொத்துவரி உயர்த்துவது குறித்து கூட்டம் நடைபெற்றது. சொத்துவரி உயர்த்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக மற்றும் பிஜேபி , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த மாமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு.
🐠🐠🐠🐠🐠
👉ஸ்டெர்லைட் விவகாரம் தொடர்பாக வேதாந்தா நிறுவனத்தின் மேல்முறையீடு மனு மீதான விசாரணை தள்ளிவைப்பு
ஜூலை மாதம் 2ம் வாரத்துக்கு தள்ளிவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவு
🐠🐠🐠🐠🐠
👉காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் தேவபாராயணம் பாட அனுமதி அளித்த உத்தரவுகள் நிறுத்திவைப்பு
உதவி ஆணையர், தனி நீதிபதியின் ஆகியோரின் உத்தரவுகளை நிறுத்தி வைத்தது சென்னை உயர்நீதிமன்றம்.
🐠🐠🐠🐠🐠
செய்தியாளர் கண்ணன்