திண்டுக்கல் அடுத்துள்ள மங்களப்பபுள்ளி லெட்சுமி நரசிங்க பெருமாள் கோவில், தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் கோவில்களில் தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார்.
*இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு திண்டுக்கல் அருகே தாடிக்கொம்பு கோவிலில் பேட்டி*
பழனியில் இரண்டு வருடங்களுக்குள் புதிதாக இரண்டாவது புதிய ரோப்கார் திட்டம் செயல்படுத்தப்படும்.
திமுக ஆட்சிக்கு வந்து 10 மாதத்தில் 2500 கோடி மதிப்புள்ள அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளது.
தமிழக கோவில்களில் இருந்து வெளிநாடுகளுக்கு கடத்திக் கொண்டு செல்லப்பட்ட சாமி சிலைகள் 872 சிலைகள் மீட்க்கப்பட்டு உள்ளது . மேலும் தற்பொழுது வெளிநாடுகளில் இருந்து மீட்கப்பட்ட 4 சிலைகள் டெல்லியில் வைக்கப்பட்டு உள்ளது இதனை விரைவில் தமிழக. கொண்டு வரப்படவுள்ளது மீட்கப்பட்ட சிலைகள் அனைத்தையும் எப்படி பாதுகாப்பது என்பது குறித்து தமிழக முதல்வர் விரைவில் அறிவிப்பார் என்று இந்து அறநிலையத்துறை அமைச்சர் P.K. சேகர்பாபு கூறினார்.
செய்தியாளர் மணிவண்ணன்