செய்தி துளிகள்

 


       👉 சென்னை சாந்தோம் சர்வதேச கழிப்பறை திருவிழாவில் எம்.எல்.ஏ உதயநிதி, இயக்குனர் கிருத்திகா உதயநிதி பங்கேற்பு.


600 தூய்மைப் பணியாளர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு, கழிப்பறை சுத்தம் செய்யும் சாதனங்களை வழங்கினர்.


கக்கூஸ் செயலியையும் தொடங்கி வைத்தனர்.

            👀👀❤👀❤👀👀

    👉நெல்லை : நாங்குநேரி அருகே 11 ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பெண் குழந்தை பிறந்தது. பணகுடி இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது.

            👀👀❤👀❤👀👀

        👉12ஆம் வகுப்பு இரண்டாவது திருப்புதல் தேர்வுக்கான கணித வினாத்தாள் லீக்கானது

12ம் வகுப்பு கணித பாட வினாத்தாள் கசிந்த விவகாரம்; 


புதிய வினாத்தாளைக் கொண்டு நாளை கணித பாடத் தேர்வு நடத்தப்படும்


 - அமைச்சர் அன்பில் மகேஸ் விளக்கம்

                 

                 👀👀❤👀❤👀👀

    👉திருவள்ளூர் மாவட்டம் புழல் ஏரியில் குளித்தபோது தண்ணீரில் மூழ்கி சியாம், விஜயராஜ் ஆகியோர் உயிரிழப்பு.


    👉அண்மையில் விசிகவுடன் மக்கள் அரசு கட்சி இணைந்த நிலையில், அதன் தலைவராக இருந்த ரஜினிகாந்த் விசிகவின் துணை பொதுச் செயலாளராக நியமனம்.

- விசிக தலைவர் திருமாவளவன் அறிவிப்பு.

                 👀👀❤👀❤👀👀

    💥💢திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கடற்கரையில்  200 அடி தூரத்திற்கு மேலாக கடல் நீர் உள்வாங்கியுள்ளது இதனால் தரிசனத்திற்கு வந்த பக்தர்கள்  அச்சமடைந்துள்ளனர்.

                 👀👀❤👀❤👀👀

    👊💥ஆபரேசன் கஞ்சா வேட்டை 2.0: சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து 31.5 கிலோ கஞ்சா பறிமுதல்

                 👀👀❤👀❤👀👀

    👧திருவாரூர்: மருத்துவமனையில் இருந்து தப்பிய கைதி - இரு பெண் காவலர்கள் சஸ்பெண்ட்

                   👀👀❤👀❤👀👀

    👉💥ராமநாதபுரத்தில் வாகன சோதனையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள வைரத்தை பறிமுதல் செய்த போலீசார், அதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

                 👀👀❤👀❤👀👀

    👉💥மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா சாம்பியன்


* இறுதிப்போட்டியில் 71 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தியது


* முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 356 ரன்கள் குவிப்பு


                👀👀❤👀❤👀👀


நிருபர் பாலாஜி