நவக்கிரக தோஷம் நீங்கும் வழிமுறைகள்

 


        🌹🙏🌹🙏🌹🙏🌹


எந்தெந்த விலங்குகளுக்கு உணவளித்தால் நவக்கிரக தோஷம் நீங்கும் தெரியுமா?


பொதுவாக விலங்குகளுக்கு உணவளித்தால் நாம் செய்த பாவங்கள் நீங்கும் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர். அந்த வகையில் எந்தெந்த விலங்குகளுக்கு நாம் உணவு அளித்தால் கிரகப் பிரச்சனை, தோஷங்கள் தீரும் என்பது குறித்து இந்தப் பதிவில் நாம் காண்போம்.


🐄🐄🐄🐄🐄🐄


பசுவிற்கு கீரை, பழங்கள் உள்ளிட்டவற்றை கொடுப்பதால், நாம் செய்த பாவங்கள் அழியும்.


🐎🐎🐎🐎🐎🐎


சூரியன்: சூரிய பகவானின் கிரகப் பிரச்சனைகள் உங்கள் ஜாதகத்தில் இருந்தால், குதிரைக்கு உணவளிப்பதன் மூலம் அந்த பிரச்சனை தீரும்.



🦣🐘🦣🐘🦣


வியாழன்: குருபகவானால் பிரச்சனைகள் இருந்தால் திருமணம் மற்றும் கல்வி பாதிக்கப்படும். அதை நிவர்த்தி செய்ய மாடுகளுக்கு தீவனம் அல்லது யானைக்கு உணவு அளிக்கலாம்.


🐠🐟🐬🐠🐟🐬


சந்திரன்: உங்களது ஜாதகத்தில் சந்திர பகவானின் பார்வை உக்கிரமாக இருந்தால், அதை சரிசெய்ய நீர் வாழ் உயிரினங்களுக்கு உணவு வழங்கலாம். அதாவது மீன், ஆமை உள்ளிட்ட நீர் வாழ் உயிரினங்களுக்கு உணவு வழங்கலாம்.



🐏🐑🐏🐑🐏🐑🐏


செவ்வாய்: செவ்வாய் கிரகம் திருமண விஷயத்தில் முக்கியமான தடையாக பார்க்கப்படுகின்றது. ஆடு அல்லது செம்மறி ஆட்டுக்கு உணவு கொடுப்பதன் மூலம் நம் கெட்ட வினைகள் குறைகின்றது. மேலும், குரங்குகளுக்கு தானியங்களையும் அளிக்கலாம்.


🦜🦜🦜🦜🦜🦜


புதன்: உங்கள் ஜாதகத்தில் புதன் அதிபதியாக இருக்கும் பட்சத்தில் அவர் மிகச்சிறந்த பேச்சாளராக இருப்பார். புதன் திசை பிரச்சனையாக உள்ளவர்கள், கிளிகளுக்கு உணவு வைப்பது சிறந்தது. அப்படி இல்லையெனில், தங்கள் வீட்டின் மேல் கூரையில் பறவைகளுக்கு உணவுகள் மற்றும் தண்ணீர் வைக்கலாம்.


🕊️🕊️🕊️🕊️🕊️🕊️🕊️


சுக்கிரன்: செல்வத்தை அளிக்கக்கூடிய கிரகம் சுக்கிரன். இந்த கிரகம் நல்ல முறையில் வலுப்பெற புறா உள்ளிட்ட பறவைகளுக்கு தானியங்களை உணவாக கொடுக்கலாம்.


🐃🐃🐃🐃


சனி: நாம் அனைவரும் மிகவும் பயப்படும் ஒரு கிரகம் சனி. சனி பகவானின் அருளைப் பெற கருப்பு நிற விலங்குகள், பறவைகளுக்கு உணவளிக்கலாம். உதாரணமாக எருமை, கருப்பு நிற நாய், காகம் உள்ளிட்டவை.


🦮🦮🦮🦮🐕‍🦺🐕‍🦺🐕‍🦺


ராகு – கேது: ராகு – கேது உங்கள் ஜாதகத்தில் வலுப்பெற நாய்களுக்கு ரொட்டி கொடுப்பதும், எறும்புகளுக்கு சர்க்கரை, மாவுப்பொருட்களை உணவாக கொடுப்பதும் நல்ல பலன்களைத் தரும்...


🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔

         

   என்றும் இறைப்பணியில்               

ஓம் நமசிவாய

மோகனா  செல்வராஜ்